மக்கள் முடிவு: ராகுல் விரக்தி

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (58)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனை மதிக்கிறேன். தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கொள்கை ரீதியில் தான் போராட்டம் நடந்தது. பிரசாரத்தின் போது, மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் எனக்கூறினேன் . மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளார்கள். பிரதமர் மோடி, பா.ஜ.,வுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

அமேதி மக்கள் ஸ்மிருதி இரானியை தேர்வு செய்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். குறைகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. மோடி மீண்டும் பிரதமர் ஆவதை மதிக்கிறேன். தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். நான் நினைத்ததில் எது தவறாக போனது என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று உகந்த நாள் அல்ல.
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனை நான் மதிக்கிறேன். மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூசவில்லை. என் மீது யார் அவதூறு வைத்தாலும் அவர்கள் மீது அன்பை செலுத்துவேன். தோல்வியை கண்டு தொண்டர்கள் பயப்பட தேவையில்லை. தொடர்ந்து போராடுங்கள். இவ்வாறு ராகுல் கூறினார்.


பிரியங்கா வாழ்த்து


காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில், மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். பிரதமர் மோடிக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-மே-201914:23:22 IST Report Abuse
Milirvan யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை'ங்கிறதுதான் ஞாபகம் வருது.. லண்டன் குடியுரிமை, லண்டன் சொத்து சேர்ப்பு, காங்கிரஸ் சொத்துக்களை ஹெரால்ட் பாணியில் திருடுவது, ரபேல் ரபேல்'ன்னு புளுவுறது, சொம்மானங்காட்டியும் விபூதி குங்குமம் வச்சி கோவிலுக்கு போய் பிலீம் காட்டுறது, இந்திய எதிரி சீனா கூட கூடிக்குலாவுறது, கோர்ட்டு சொல்லாததை சொல்லிச்சி'ன்னு கத்தி கலாட்டா பண்றது, அப்புறம் மன்னிப்பு கேக்குறது, ரசம் ரசம், சாம்பார் சாம்பார் ங்கிறாப்புல பாங்காக், பாங்காக், இத்தாலி, இத்தாலி'ன்னு ஊர் சுத்துறது, அப்புறம் மோடிஜி தான் ஊர் சுத்துறார்'ன்னு கத வுடுறது, எவனோ எய்தி தர்றத அப்புடியே வாந்தி எடுக்குறது, இதெல்லாம் தான் ஒன்னய பாத்தா ஞாபகம் வருது.. என்ன பண்ணலாம் பப்பு...
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-மே-201914:04:28 IST Report Abuse
Milirvan கட்டி புடிச்சி ஒத்த கண்ண கசக்கி கேமராக்கு போஸ் குடுத்து அன்ப காட்ட வேண்டியதுதானே பப்பு... அதான் முன்னைய அனுபவம் இருக்கே...
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-மே-201913:59:19 IST Report Abuse
Milirvan ///மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனை மதிக்கிறேன். தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்./// ... அதாவது மக்களை எதிர்த்து, அவர்களை முடிவை எதிர்த்து போராடுவோம் என்கிறார் தலைவர் பப்பு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X