காவலாளி பட்டத்தை நீக்கினார் மோடி

Added : மே 23, 2019 | கருத்துகள் (14)
Advertisement
காவலாளி பட்டத்தை நீக்கினார் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காவலாளி பட்டத்தை நீக்கினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: என் ஒரு பகுதியாக காவலாளி இருக்கிறார். அந்த வார்த்தை என்னை உற்சாகப்படுத்துகிறது. அதைவைத்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுங்கள். அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்! என டுவிட்டரில் மக்களுக்காக பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.


தற்போது, காவலாளிக்கான வேகத்தை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட இந்த வேகத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். காவலாளி வார்த்தை எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சென்றிருக்கலாம். ஆனால், என்னில் ஒரு பகுதியாக உள்ளது. இதனையே நீங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பட்டத்தை சேர்த்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் மோடியை பின்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உண்மை கசக்கும் நாடகம் முடிந்தது...
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
24-மே-201907:57:41 IST Report Abuse
Viswam எவ்வளவோ இழிச்சொற்கள். ஏச்சுக்கள் அனைத்தையும் தாண்டி தனி மனிதனாக கட்சிக்கு வெற்றி தேடித்தந்த பெருமை மோடியையே சாரும். நாட்டில் எல்லோரையுமே தானும் ஏதாவது ஒரு விஷயத்தில் காவலாளிதான் என உணரச்செய்யும் விதத்தில் மோடி செயல்பட்டவிதம் மக்களை சுயசிந்தனைக்கு ஆட்படுத்தியது . லோக்கல் லெவெலில் வேட்பாளர்கள் யாராக நின்றபோதிலும், தாம் அளிக்கும் வோட்டு மோடியை பிரதமராகும் என்கிற ஆசையில் வாக்களித்த மக்கள் உப்புமா கட்சிகளின் கோமாளிகளை சரியாக ஏமாளிகள் ஆக்கிவிட்டார்கள். மேலும் மோடிக்கு பிஜேபி கூட்டணி கட்சிகளால்கூட தொல்லை வரக்கூடாது என்பதற்காகவே தனி மெஜாரிட்டி கொடுத்த மக்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். தமிழகம் மட்டும் ஏனோ இந்த விடி வெள்ளியை திருட்டு கழக மேகக்கூடத்தில் காணத்தவறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பண்டைய காலத்தில் கடல் தாண்டி கப்பல் ஓட்டியும், கடாரம்கொண்டு நின்ற தமிழர்கள் மிகவும் விசால அறிவு பெற்றவர்களாக இருந்தகாலம் எங்கே போயிற்றோ? ஜஸ்டிஸ் பார்ட்டி தொட்டு திருட்டு கழகம்வரை நமது மத கோட்பாடுகளை பழித்தும், நல்லிணக்கத்திற்காக மற்றமதங்களை உசத்தியும் காட்டி, நமது வழிமுறைகளை , வழிபாட்டுமுறைகளை செய்வதற்கே கூனி குறுகும் மனநிலை என்று விலகுமோ அப்போதுதான் ஆதிகாலம்தொட்டே இந்துக்களான தமிழர்கள் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிப்பார்கள். கழக டிவி களின் மாயையில் சிக்காமல் சற்றே வெளியில் வந்து உண்மை நிலைமையை புரிந்துகொள்வார்கள் என நம்பிக்கை வைத்து காத்திருக்கும் சக தமிழர்களில் நானும் ஒருவன்.
Rate this:
Share this comment
Cancel
24-மே-201904:58:37 IST Report Abuse
ஆப்பு 2014 ல் ஆளுக்கு 15 லட்சம்...கோவிந்தா....2 கோடி பேருக்கு வேலை...கோவிந்தா...கோவிந்தா...2019 ல எல்லோருக்கும் வூடு....கைப்புள்ள கதை யாயிடும் போலிருக்கே....
Rate this:
Share this comment
24-மே-201906:11:36 IST Report Abuse
Arunachalamநீ போய் பிச்சை எடுக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X