தோல்வியில் சதமடித்த பேட்ஸ்மேன்; சசிதரூர் புலம்பல்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (19)
Advertisement
சசிதரூர், தோல்வி அணி, சதமடித்த பேட்ஸ்மேன், இனிப்பு, கசப்பு

புதுடில்லி : அணி தோல்வியடைந்த நிலையில் சதமடித்த பேட்ஸ்மேனை போல உணர்கிறேன் என்று கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சசி தரூர், எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை விட 48 ஆயிரத்து 731 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள அவர் இந்த முறையும் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

இந்த தேர்தலில், பா.ஜ. 300 க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கட்சி 53 என்ற மிக குறைந்த தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கின்றது. இதனால் அதிகளவு தொகுதிகளை கைப்பற்றி 2வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் பா.ஜ..வை பிரதமர் மோடி வழிநடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், சசி தரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளேன். எனது அணி தோல்வி அடைந்த நிலையில், சதம் அடித்த பேட்ஸ்மேன் போன்று நான் உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார். இது இனிப்பு கலந்த கசப்பு நிறைந்த உணர்வு. இதனை பிரதிபலிக்க எனக்கு சிறிதுநேரம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:44:20 IST Report Abuse
madhavan rajan இவரைப்போன்ற ஒரு சில அறிஞர்களெல்லாம் எதிர் அணியில் இருப்பதுதான் பாராளுமன்றத்துக்கு நல்லது. அப்போதுதான் மக்களின் பிரச்சினையைப் பற்றி பேசுவார்கள். ஆளும் கட்சியியில் இருந்தால் ஆணவத்தில் கண் மண் தெரியாது ஆடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மே-201903:35:48 IST Report Abuse
J.V. Iyer தரூர் தவறான கட்சியில் உள்ளார். பாஜகவில் இருந்தால் உருப்படுவார். நாட்டிற்கும் நல்லது. இவர் எவ்வளவு முறை சாதம் அடித்தாலும் இவர் கட்சி தோற்றுக்கொண்டேதான் இருக்கும்.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:48:31 IST Report Abuse
madhavan rajanஉடம்பில் பல பாகங்கள் நன்றாக இருந்தாலும் தலையில் உள்ள மூளை சரியில்லை என்றால் ஏதாவது நல்லது நடக்குமா? அதுதான் காங்கிரசின் நிலைமை. தலைவருக்கு நல்ல ஆலோசகர்கள் இல்லையா அல்லது நல்ல ஆலோசகர்களை அவர் வைத்துக்கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. மணி சங்கர், திக் விஜய், சிதம்பரம் போன்றவர்களை கூட வைத்திருந்தால் இப்போது நடப்பது போலத்தான் தொடரும்....
Rate this:
Share this comment
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-மே-201900:08:33 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த கூற்று எல்லாம் பெரிய வெங்காயம் ஈவேராவின் பெரிய mozhi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X