15 மாநிலத்தில் கணக்கை தொடங்காத காங்.,

Added : மே 23, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : இந்திய தேர்தல் முடிவுகளில், 15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், காங்கிரஸ் கட்சி தோற்றிருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.பா.ஜ., 300 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 348 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி வெறும், 52 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆனால், மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன்
காங்கிரஸ், ஒரு இடம் கூட இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா

புதுடில்லி : இந்திய தேர்தல் முடிவுகளில், 15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், காங்கிரஸ் கட்சி தோற்றிருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

பா.ஜ., 300 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 348 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி வெறும், 52 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆனால், மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில், 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அருணாச்சலபிரதேசம், இமாச்சல்பிரதேசம், திரிபுரா, குஜராத், மணிப்பூர், அரியானா, ராஜஸ்தான், டில்லி, ஆந்திரா, தெலுங்கானா, மிசோரம், ஒடிசா, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலியில் காங்கிரஸ் கணக்கையே தொடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இது, ஏற்கனவே பா.ஜ., முழங்கி வந்த 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்னும் இலக்கை நோக்கி செல்வதாக பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201909:02:22 IST Report Abuse
rm Corporates will rule India. Fundamental rights will be changed. People will feel the reactions in next five years .Tamil people again proved divided by religion is not a good thing.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:24:47 IST Report Abuse
madhavan rajan தமிழ் நாட்டில் ஜெ வுக்கு பிறகு அதிமுக ஆட்டம் கண்டுள்ளது ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலையும் உள்ளது. கூடவே பலமான ஊழல் கூட்டணியும் உள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரத்தால் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலையினாலும் காங்கிரஸ் தப்பியது. பஞ்சாபில் முன்னாள் ஆட்சியாளர்களின் தவறும் தற்போதைய முதல்வரின் நடுநிலைப் போக்கும் வெற்றி தர வாய்ப்புள்ளது. மற்றபடி மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் சொல்லிக்கொள்ளும்படியாக கட்சியை வளர்க்கவில்லை. சில முதிய செயலற்ற தலைவர்களும், இருக்கும் தலைவர்களும் போட்டி யுக்தியாலும், புதிதாக சேராத இளைய தலைமுறைகளும் காங்கிரஸ் கணக்கு துவக்காததற்கு முக்கிய காரணம். திணிக்கப்பட்ட அகில இந்திய தலைமை, அனுபவமில்லாத ராகுலின் பேச்சு, திடீரென்று அழைத்துவரப்பட்ட பிரியங்கா எல்லாம் வெற்றி பெற நிச்சயமாக உதவாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-மே-201904:51:31 IST Report Abuse
blocked user படிக்காமல் MPhil பட்டம் வாங்கிய ஒரு பிரிட்டிஷ் தறுதலையை வைத்துக்கொண்டு கடின உழைப்பில் சரித்திரம் படைத்த ஒரு பிரதமரை மிக எளிதாக தோற்கடித்து விடலாம் என்று போட்ட கணக்கு தவறு என்று காங்கிரஸ் இன்னும் கூட உணரவில்லை. பிறகு எப்படி ஜெயிப்பதாம்? போட்டி கூட போட முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X