அனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (23)
Advertisement
Indianresults, பா.ஜ., பிரதமர் மோடி

புதுடில்லி: பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கானது.மோடிக்கானது அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்வேன். யாரையும் தவறாக நினைக்க மாட்டேன். எனக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன். தேசத்திற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்துக் கொண்டேன் என பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது.
ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா..உலக நாடுகள் இந்தியாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்த தேர்தலில் மக்கள் அதிகளவு ஓட்டளித்தனர். கடும் வெயிலிலும் மக்கள் ஓட்டு போட்டனர். சிறப்பாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி.
1984ல் 2 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். இப்போது தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளோம்.


உலகிற்கு உதாரணம்:

பா.ஜ.,வுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கிடைத்துள்ளது. எங்களை தேர்வு செய்ய நாடு ஒன்றுபட்டுள்ளது. தேர்தலின் போது உயிர்நீத்த மக்களை நான் மதிக்கிறேன். உலகத்திற்கு ஒரு உதாரணத்தை இந்திய உருவாக்கியுள்ளது.
இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது. நாட்டு மக்கள் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்களும், எங்கள் கூட்டணியினரும் வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
பா.ஜ, ஆளாத மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும். கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசனத்தில் பா.ஜ.,விற்கு முழு நம்பிக்கை உள்ளது. அரசியல் சாசனமே உயர்ந்தது. வரி கட்டுவோர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. விவசாயிகளுக்கு கிடத்த வெற்றி.பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி நேர்மைக்கானது. மோடிக்கானது அல்ல.
இந்த தேர்தலில் தான் ஊழல், விலைவாசி உயர்வு போன்றவை விவாதப் பொருளாக இல்லை.
கடந்த 30 ஆண்டுகளாக மதச்சார்பின்மை விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போலி மதசார்பற்றவர்கள் நாட்டை தவறாக வழிநடத்தினர்.அவர்களின் நிலை தற்போது தெளிவாகியுள்ளது. இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்க செய்வது எங்களின் இலக்கு.
இந்தியாவில் இரண்டு ஜாதி மட்டுமே உள்ளது. ஒன்று ஏழை மற்றொன்று, வறுமையிலிருந்து ஏழைகள் வெளியே வர உதவுபவர்கள். தேசம் மீண்டும் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. மனதை மூடிக்கொண்வர்களுக்கு மக்களின் குரல் கேட்காது.
நாட்டின் நலனுக்காக,அனைவரையும் அரவணைத்து அழைத்து செல்ல வேண்டும். வலிமையான எதிரிகளையும் கூட உடன் அழைத்து செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வேன். எப்போதும் எனக்காக எதுவும் செய்ய மாட்டேன். யார் மீதும் எனக்கு தவறான எண்ணம் கிடையாது. நானும் தவறு செய்திருக்கலாம். அதற்காக யாரையும் நான் பழி வாங்கியதில்லை.
மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்போது, அரசின் கடமையும் அதிகரிக்கிறது.
உங்கள் அன்பால் என்னை ஆசீர்வதித்துள்ளீர்கள். ஒவ்வொரு நிமிடமும் என்னை தேசத்திற்கு அர்ப்பணித்து கொண்டுள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
24-மே-201911:48:43 IST Report Abuse
Rohin திரு ராமகிருஷ்ணன் அண்ட் நடேசன் அண்ட் அவர்களே வாரணாசியை விட வயநாட்டில் மொத்த ஓட்டுக்கள் அதிகம் அது தெரியுமா.........
Rate this:
Share this comment
Cancel
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
24-மே-201910:09:52 IST Report Abuse
D. Selestine Arputharaj கரெக்ட் ... எல்லா மதத்தினரையும் அரவணைத்து போனீர்கள் என்றால் நீங்கள்தான் இன்னும் 15 வருடம் நிலையான பிரதமரா இருப்பிங்க... மதம் சாதி பிரச்சினைகளை தூண்டுபவர்களை அடக்கி வச்சாலே போதும் மதத்தையும் தாண்டி எல்லோருக்கும் உங்களையும் உங்கள் கட்சியையும் பிடித்து விடும்... ஆல் தி பெஸ்ட் ...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-மே-201907:24:44 IST Report Abuse
ஆரூர் ரங் அரவணைக்க வேறு ஆள் இருக்கார் அதோட இலவச இணைப்பா கண்ணும்அடிப்பார் .கண்டவனையும் உள்ளே விட்டு திண்டாடாம இருந்தா சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X