சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'யார்கிட்டேயாவது,'பாட்டு' வாங்கிட்டாரோ!'

Added : மே 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'யார்கிட்டேயாவது,'பாட்டு' வாங்கிட்டாரோ!'

'யார்கிட்டேயாவது,'பாட்டு' வாங்கிட்டாரோ!'
திருப்பூர் மாவட்டத்தில், கோடை குடிநீர் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், ரமேஷ்குமார், ஒன்றியம் வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'குடிநீர் பிரச்னைக்காக, பொதுமக்கள், சாலை மறியல் செய்யும் அளவுக்கு, அதிகாரிகள் கவனக் குறைவாக இருக்க வேண்டாம். தேவையான இடங்களில், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நாம் தான், அனைத்து விவகாரங்களையும் கவனிக்க வேண்டும்' என்றார்.பொறியியல் பிரிவைச் சேர்ந்த, இளைஞர் ஒருவர், 'மூன்று ஆண்டுகளாக, தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதியாக, நாம தானே எல்லாத்தையும் செஞ்சிட்டிருக்கோம்... புதுசா இவர், 'அட்வைஸ்' பண்றாரே... யார்கிட்டேயாவது, 'பாட்டு' வாங்கிட்டாரோ...' என, முணுமுணுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-மே-201919:23:31 IST Report Abuse
D.Ambujavalli இம்முறை அதிமுகவின் தோல்விக்கு காரணமே தண்ணீர் தான் அதிகாரிகள் மட்டும் என்ன சிருஷ்டியா செய்ய முடியும் தண்ணீரை இவர்களே மணலை அள்ளுவார்களாம், நீர்நிலைகளையெல்லாம் கட்டிடங்களாக்குவார்களாம் , பின் எந்த அதிகாரியை விரட்டினாலும் என்ன பயன் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X