டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 23, 2019
 'டவுட்' தனபாலு

தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை: இருபது ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன், துாத்துக்குடி மக்களிடம் ஓட்டுகள் கேட்டேன்.

டவுட் தனபாலு: பொது வாழ்க்கைக்கு வருவதே, பின்னொரு நாளில், ஆட்சி, அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத் தானா... 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'ன்னு, சொல்லத் தோணுதுங்கறதுல, 'டவுட்'டே இல்லே!

பா.ம.க., வழக்கறிஞர், கே.பாலு: தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி அளவுக்கு, ஸ்டாலின், நம்பகமான, செயலாற்றல்மிக்க தலைவராக, மக்களிடத்தில் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை.

டவுட் தனபாலு: 'முதல்வர் வேட்பாளராக என்னை முன்னிறுத்தி, கடந்த தேர்தலைச் சந்தித்தேன்; மக்கள் ஏற்கவில்லை'ன்னு, அன்புமணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தாரே... இந்த நிலையில், அடுத்த கட்சித் தலைவர்களை விமர்சிப்பது சரியா என்பது தான், என்னோட, 'டவுட்!'

தி.மு.க., செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணர்வு அதிகரித்து வருகிறது. அகில இந்தியக் கட்சிகள், அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும், வலுப்பெற்று வருகிறது.

டவுட் தனபாலு: அப்புறம் எதற்குங்க, அகில இந்தியக் கட்சிகளோடு உறவு பாராட்டுறீங்க... மாநில உணர்வை மதிக்காட்டியும் பரவாயில்லை; தங்கள் உணர்வுக்கு மரியாதை கிடைத்தால் போதும் என்பதாலா என்ற, 'டவுட்' வருதே...!lll

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X