உ.பி.,யில் மோடி அலை! அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு அடி

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 உ.பி.,யில் மோடி அலை!  அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு அடி

லக்னோ, : நாட்டிலேயே மிக அதிகமாக, 80 தொகுதிகளை உடையது உத்தர பிரதேச மாநிலம். 'நாட்டின் பிரதமரை தேர்வு செய்யக் கூடியது' என, அரசியல்வாதிகளால் அழைக்கப்படும், மாநிலம் இது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், பெரும்பாலான ஆண்டுகள், இங்கு காங்கிரஸ் தான், ஆதிக்கம் செலுத்தியது. பின், பா.ஜ., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின.

கடந்த லோக்சபா தேர்தலில், இங்கு, பா.ஜ., 68 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளை அதிர வைத்தது. பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு, உ.பி., மாநில வெற்றியே, முக்கிய பங்கு வகித்தது. இந்த தேர்தலில், பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்த, சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன.




இதனால், 'கடந்த முறை முறைபோல், இந்த முறை, பா.ஜ., தொகுதிகளை அள்ள முடியாது' என, எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியிலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதியிலும் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில், ராகுல், அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். ரேபரேலியில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா போட்டியிட்டார்.
இங்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடைசி கட்ட பிரசாரங்களில், பா.ஜ., ஆதிக்கம் செலுத்தியது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி தலைவர்கள், ஒரே மேடையில் பேசி, வாக்காளர்களை வசப்படுத்த முயன்றனர்.
ஆனாலும், இவர்களது கூட்டணியால், பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க முடியவில்லை. மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், 64 தொகுதிகளை, பா.ஜ., கூட்டணி, வாரிச் சுருட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு, 15 இடங்களே கிடைத்துள்ளன.
இந்த தேர்தலிலும், உ.பி.,யில் வீசிய மோடி அலை, எதிர்க்கட்சிகளை வாரிச் சுருட்டி வீசி விட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுலே, அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்ததை, கட்சி தொண்டர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ராகுலின் பாட்டி, இந்திரா, தந்தை ராஜிவ், தாய் சோனியா ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியில், அவர் தோல்வியை சந்தித்துள்ளது, கட்சி மேலிட தலைவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில், எந்த தேர்தலிலுமே, பிரதமரை தீர்மாணிக்கும் சக்தியாக திகழும், உ.பி., இந்த தேர்தலிலும், மோடிக்கு மகுடம் சூட்டி, அதை உறுதி செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
25-மே-201917:09:58 IST Report Abuse
Rafi காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்த அவர்கள் போட்டி இட இரண்டு தொகுதிகளில் (அமேதி, ரேபரேலி)_வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம், அதே நேரத்தில் கூட்டணியில் இடமில்லை, நாங்கள் வெற்றி பெற்றால் காங்கிரஸ் பிரதமர் பதவியை இவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்ற திமிரான செயலை, காங்கிரஸ் தன்மானம்மாக எடுத்து கொண்டு பிரியங்காவை தேர்தல் பணியில் இறக்கி தன்னுடைய வாக்கு வங்கியை உயர்த்த, சிறுபான்மையினர்களின் வாக்குகள் பிரிய, தோல்வியை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்தி கொண்டார்கள், கன்னியம்மாக பத்து தொகுதிகளை காங்கிரசிற்கு கொடுத்திருந்தால் தேர்தல் முடிவு தலை கீழாகி இருக்கும். மேலும் அந்த வலிமையான கூட்டணியை கொண்டு நாடெங்கிலும் எதிர் கட்சி மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மம்தாவும், ஜெகனும், TRS , மற்றும் நாயுடும் வேறு வலியில்லாமல் காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வந்திருப்பார்கள். வலிமையான கூட்டணியின் மீது மக்களுக்கும் நம்பிக்கை வந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
24-மே-201910:49:51 IST Report Abuse
Yes your honor மாயாவதி தலித், அகிலேஷ் பூமியார் (உயர்வகுப்பு), உ.பி.யைப் பொருத்தவரையில் தலித் மற்றும் பூமியார் இடையே சமூக ஒற்றுமை என்றுமே நிலவாது. கடந்த மாயாவதியின் ஆட்சிக் காலத்தின் போது தலித்துகள் மற்ற வகுப்பினர்மீது, அதிலும் குறிப்பாக பூமியார் மீது அபாண்டமான பழிகளைத் தயங்காமல் கூறி மிகவும் இம்சைப் படுத்தினார்கள். அரசு அலுவலர்கள், காவல்துறையினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து பூமியார் மக்களும் பழிவாங்கப்பட்டார்கள். இனி மாயாவதி உ.பி.யில் அரசமைப்பது என்பது நடந்தால் தான் உண்டு. இன்னிலையில், அகிலேஷ் மாயாவதியுடன் கூட்டணி (கட்பந்தன்) அமைத்தது, யானை தன் தலையில் ஏதோ செய்தது போலானது. இதை உணர்ந்த முலாயம் அவர்கள் அகிலேஷை கட்டுப்படுத்த முயன்றாலும், விதி அகிலேஷை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது. கடந்த மார்சு மாதம் நான் முகல்சராய் சென்றிருந்தபோது நான் தங்கியிருந்த லாட்ஜ் மேனேஜர் (முலாயம் ஆதரவாளர்) இதைப் பற்றி விளக்கமாகக் கூறி புலம்பித் தள்ளியிருந்தார். அவர் கூறியிருந்த வார்த்தைகளில் 95% அப்படியே நடைபெற்றுள்ளது. எல்லாம் நன்மைக்கே.
Rate this:
Share this comment
Cancel
24-மே-201908:38:31 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X