பதிவு செய்த நாள் :
இரண்டாவது முறை ஆட்சி, பா.ஜ., சாதனை

ழுழுமெஜாரிட்டி பலத்துடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக, மத்தியில் ஆட்சி அமைத்த, காங்., அல்லாத கட்சி என்ற பெருமையை, பா.ஜ., பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டும் தான், அந்த பெருமைக்கு சொந்தக் காரராக, இதுவரை இருந்தது. காங்கிரசின் சாதனை, மோடி சுனாமியால் முறியடிக்கப் பட்டுள்ளது.

 இரண்டாவது முறை ஆட்சி, பா.ஜ., சாதனைஅதுபோல, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், 'ஹிந்தி பெல்ட்' என அழைக்கப் படும், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஆட்சியை இழந்த, பா.ஜ., லோக்சபா தேர்தலிலும், இந்த பகுதிகளில், படுதோல்வி அடையும் என, அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.அதுவும், தேர்தல் முடிவுகளால் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில், அக்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில், கர்நாடகா தவிர்த்து, பா.ஜ.,வுக்கு ஒரு, 'சீட்' கூட கிடைக்காது என்ற கருத்தும், இந்த தேர்தலில் நிலவியது. அதுவும், இந்த தேர்தலில் தோற் கடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்களால் வெற்றி பெற முடியாத நிலையில், தெலுங்கானா, கேரளாவில், பா.ஜ., இரண்டாவது பெரிய கட்சியாக, ஓட்டு பெற்றுள்ளது.


மூன்றாவது முக்கிய அம்சமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது என்றும் பேசப்பட்டது. அதுவும், இந்த தேர்தலில் முறியடிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 1971 தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, காங்கிரசின் இந்திராவுக்கு எதிராக நின்றன.அந்த தேர்தலில், 352 இடங் களில் வெற்றி பெற்று, எதிரணியினரை படு தோல்வி அடையச் செய்தது காங்கிரஸ். அந்த வெற்றியை மீண்டும் நினைவுபடுத்தும்

வகையில், பா.ஜ., கூட்டணி கட்சிகளின் வெற்றி அமைந்து இருந்தது என்ற பேச்சும், நேற்று அடிபட்டது.


'25 ஆண்டுக்கு அசைக்க முடியாது'

கூட்டணி கட்சியாக இருந்த போதிலும், பா.ஜ.,வுக்கு, கடந்த, ஐந்தாண்டுகளாகவே குடைச்சல் கொடுக்கும் கட்சியாக விளங்கிய, சிவசேனா, தேர்தல் வெற்றி யால் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சஞ்சய் ரவுத், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:


எதிர்க்கட்சிகளுக்கு, இந்திய மக்கள் சரியான பதிலடி கொடுத்துஉள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் இருக்கின்றனர் என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.நாடு முழுவதுமே, மோடிமயமாக அமைந்துள்ளது. இன்னும், 25 ஆண்டுகளுக்கு, மோடியை யாராலும் அசைக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளை காலி செய்த தேர்தல்நடந்து முடிந்த, 17வது லோக்சபா தேர்தல் முடிவு கள், கம்யூனிஸ்ட் கட்சிகளை, இந்திய அரசியல் களத்திலிருந்து துடைக்கும் விதமாக அமைந்து உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக வீசிய, மோடி சுனாமி, கம்யூனிஸ்ட்களுக்கு, இரண்டு தொகுதி களைக் கூட கொடுக்குமா என்ற சந்தேகத்தை, நேற்று காலையில் ஏற்படுத்தியது.


கடந்த, 2014 லோக்சபா தேர்தல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டு, எம்.பி.,க்களை கொடுத்திருந்தது. மேற்கு வங்கத்தில்இருந்து அந்த, எம்.பி.,க்கள்தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய முடிவின்படி, மேற்கு வங்கத்தில் அக்கட்சியால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.தமிழகத்தில் மட்டும் தான், இரண்டு தொகுதிகளை கைப்பற்றும் நிலை உருவானது. இதற்கு, மோடி சுனாமி மட்டும் காரணமில்லை.


கம்யூனிஸ்ட்களுக்குள் நிலவும்,ஒற்றுமை இன்மை, உதவாத கொள்கைகள் போன்ற பல காரணங்களை யும் கூறலாம். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Advertisement

கட்சியில் நிலவும், பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி - முன்னாள் பொதுச் செயலர், பிரகாஷ் கராத் இடையே நிலவும் பனிப்பேரும், இந்த தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.ஏற்கனவே, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்கள், முந்தைய தேர்தல் களில் அகற்றப்பட்டனர். இந்த லோக்சபா தேர்தலுடன் அவர்கள் காணாமல் போய் விடுவர் என, அரசியல் வட்டாரங்களில், நேற்று காலையில் கருத்து நிலவியது.

கட்சி தலைவர் பதவி ராகுல் ராஜினாமா?
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், நேற்று மாலை, காங்கிரஸ் தலைவர், ராகுல், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கி றேன். பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என, நாட்டு மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர்; அதை நான் மதிக்கிறேன்.


தோல்விக்கான காரணங்களை அலசும் நாள் இது அல்ல. அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியை வாழ்த்துகிறேன்.கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் விவகாரம் குறித்து, கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், விரைவில் கூடி முடிவு செய்யும்.தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப் படத் தேவையில்லை. பா.ஜ.,வுக்கு எதிராக, அதன் கொள்கைகளை எதிர்த்து, காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இவ்வாறு, ராகுல் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
24-மே-201920:29:24 IST Report Abuse

K.P  SARATHIபொதுவாக ஆட்சியாளர்கள் உத்தமர்களாக இருந்துவிட்டு கோடிக்கணக்கான நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானா தவறான கொள்கை இருந்து என்ன பயன் மேலும் வலுவான எதிர்கட்சி தேவை

Rate this:
BJP TEAM - மதுரை,இந்தியா
24-மே-201916:22:06 IST Report Abuse

BJP TEAMவாழ்க மோடிஜி வளர்க தாமரை

Rate this:
24-மே-201912:53:18 IST Report Abuse

Sathyanarayanan Sathyasekarenanswer to foolsIt is Modi who has united the nationalists and brought them in one platform.It is Modi who has made us understood about the curse of dynasty. It is Modi who has taken the last man sitting in the remotest part into the stream of development. It is Modi who continuously talked with the West eye to eye. It is Modi who actually has given true freedom to the true Indians. It is Modi who has shown the guts and courage to take on Pakistan at their turf. It is Modi who has made China understand that both respect and threatening are reciprocated in equal proportion. It is Modi who is maintaining cordial relationships with Arab Sunni world in one side and Shia world on the other. It Modi alone who has earned the right to speak on every world affair.Unbelievable. People of India for the first time has found a true leadership in him, to whom India, Indians and Indianness matter. Now the corrupts, anti nationals and foreign agents should be jailed. Jay Ho Modi. Ghar ghar Modi. JAY MAA.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X