எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வெற்றி!
மோடிக்கு வெற்றியை அளித்தது எதிர்க்கட்சிகளே

பா.ஜ.,வுக்கு எதிராக, பலம் வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்த முடியாமல், தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள், மோடியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தி, நாட்டை இரண்டாவது முறையாக ஆட்சி செய்ய, அவரை பணித்துள்ளனவா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

 மோடிக்கு ,வெற்றியை ,அளித்தது ,எதிர்க்கட்சிகளேஎதிர்க்கட்சியினர் இடையே ஏற்படுத்த முடியாத ஒற்றுமை தான், மோடி - அமித் ஷா கூட்டணிக்கு, இரண்டாவது மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என்பது தான், இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்தும் முக்கிய அம்சம்.பா.ஜ., தன் பிரதமர் வேட்பாளராக, மோடியை முன்னிறுத்தி, பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், எதிரணியில் ஏராளமானோருக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருந்ததால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.அந்த காரணத்தால் தான், பா.ஜ.,வுக்கு எதிராக, வலுவான கூட்டணியை, எதிர்க்கட்சிகளால் அமைக்க முடியவில்லை.தேர்தல்களில், நம் இந்திய வாக்காளர்கள் பல முறை, அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில், தங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அதில் ஒன்று தான், இந்த தேர்தல் முடிவு!'ரபேல்' விமான கொள்முதலில் பேரம் நடக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும், அதை மறைத்து, எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட விஷம பிரசாரம், மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.


மேலும், எதிர்க்கட்சிகளில் இருந்த, மாயாவதி, முலாயம், லாலு பிரசாத் போன்றவர்களை, ஊழல் பெருச்சாளிகள் என்று தான், மக்கள் இன்னமும் கருதுகின்றனர். அதன்வெளிப்பாடு தான், இந்த தேர்தல் முடிவுகள்!'ராகுல் தான் நாட்டின் அடுத்த பிரதமர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை; அது பலிக்க வில்லை. அதற்கு, மற்றொரு காரணமும் உண்டு. ஸ்டாலினின் அறிவிப்பை, எதிரணியில் இடம்பெற்றிருந்த பல தலைவர்கள் ரசிக்க வில்லை. அவர்கள் ஒன்றாக, பா.ஜ.,வை எதிர்த் தாலும்,ஸ்டாலினின் அறிவிப்பை விரும்ப

வில்லை. எதிரணியில் இடம் பெற்றிருந்த, குழப்ப வாதி தலைவர்களான, ராகுல்,சரத் பவார், மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு போன்றவர் களை விட, பா.ஜ., தலைவர், அமித் ஷா, சிறப்பானவ ராக மக்களுக்கு தெரிந்திருக்கிறது.


அதனால் தான், பா.ஜ.,வுக்கு அமோக வெற்றியை அளித்துஉள்ளனர்.அமித் ஷாவும், தன் ராஜதந்திர நடவடிக்கைகளால், கூட்டணி கட்சிகளை ஒருங்கே இணைத்து, கட்டுக்கோப்பாக வைத்து, எவ்வித குழப்பமும் இல்லாமல், தேர்தலை சந்தித்து, வெற்றியும் பெற்று விட்டார். பா.ஜ., கூட்டணியில் இருக்கும், மஹாராஷ்டிராவின் சிவசேனா; உத்தர பிரதேசத்தின்நிஷாத் கட்சி; பீஹாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்றவற்றுடன், பா.ஜ.,வுக்கு உரசல்கள் இருந்த போதிலும், அவர்கள் விரும்பிய, 'சீட்'களை வழங்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார் அமித் ஷா.அது இப்போது, பீஹார் மற்றும் உ.பி.,யில் நல்ல பலனை தந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை.


தேர்தல் அரசியல் வரைபடத்திலிருந்து மெல்ல அழிந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த, நான்கு மாநில தேர்தலில், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை, காங்கிரஸ் கைப்பற்றியது, அக்கட்சிக்கு சற்று பலத்தை தந்தது.எனினும், பல மாநிலங் களில், கூட்டணியை உருவாக்க முடியாமல் பரிதாபமாக தனித்து நின்றது. உதாரணமாக, டில்லி யில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி எவ்வளவோ முயன்றது; பல மாதங்கள் காத்திருந்தது; எனினும், கூட்டணி அமையவில்லை.இது, பா.ஜ.,வுக்கு லாபமாக போய்விட்டது.


தலைநகரின், ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது. உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்து,காங்கிரசை வெளியே தள்ளின.இதுபோன்ற காரணங்களால் தான், 2014 தேர்தலில் இரண்டு இடங்களில், உ.பி.,யில் வென்ற காங்கிரஸ், இந்த முறை, ஒரேயொரு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது.


தீவிர அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த சோனியா, வெற்றி பெற்று விட்டார்; தீவிரமாக களம் இறங்கிய ராகுல், அமேதியில் தோல்வி அடைந்து விட்டார். காங்கிரசின் வாரிசு அரசியலுக்கு எதிரான அலை, நாடு முழுவதும் எதிரொலித்திருப்பது போல, சமாஜ் வாதிமற்றும் லாலுவின், ஆர்.ஜே.டி., கட்சிக்கு எதி ராகவும் வீசியது. அதனால் தான், பீஹாரில், காங்., உடன் சேர்ந்த அவ்விரு கட்சிகளுக்கும், ஒற்றை இலக்க இடங்கள் தான் கிடைத்தன. இதனால், லாலு வின் மகன், தேஜஸ்வியின் அரசியல் எதிர்காலம் சூனியமாகியுள்ளது.பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக,

Advertisement

ஓரணியாக திரள முடியாத கட்சிகள், பல கரங்களாகநீண்ட நிலையில், தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவும், நான்காவது அணி ஏற்படுத்த முயன்றார். இது, எதிரணியின ரின் பதவி ஆசையையும், பா.ஜ., எதிர்ப்பையும், மக்களிடையே அம்பலப்படுத்தி விட்டது.


இந்நிலையில், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், அனைத்து மாநிலங் களிலும், அனல் பறக்க பிரசாரம் செய்து, அங்குள்ள வட்டார விவகாரங்களை கிளப்பினர். எனினும், அவர்களின் தந்திரம், தென் மாநிலங் களான, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் எடுபட வில்லை என்பதற் கான காரணம், யாருக்கும் தெரியவில்லை. மேற்கு வங்கத் தில், கடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற, பா.ஜ., இந்த முறை, 17 இடங்களை கைப்பற்றியுள்ளது.தன் சொந்த மாநிலம் மற்றும் அண்டை மாநிலங்களில், நல்ல பெயர் இல்லாத, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'கிங் மேக்கர்' போல, மத்தியில் ஆட்சியை நிர்ணயம் செய்யும் பொறுப்புக்கு வரப் பார்த்தார். அவருக்கு, தேர்தல் முடிவுகள், பலத்த அடியை கொடுத்துள்ளன.இந்த தேர்தல் முடிவுகளை, இரண்டு விதங்களாக பார்க்கலாம்.


பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., தேசியம், தேச நலன், தேச பாதுகாப்பு என்ற ரீதியில், தேர்தலை அணுகியது. ஆனால், எதிர்க்கட்சிகள், மோடி எதிர்ப்பு என்ற ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. இது தான், பா.ஜ.,வின் வெற்றிக்கும், எதிர்க்கட்சிகளின் தோல்விக்கும் காரணம்.மாநில கட்சிகள் காலம் காலமாக பின்பற்றி வரும், வாரிசு அரசியல், ஜாதி அரசியல் போன்ற வற்றை பின்பற்றிய நிலையில்,அவற்றை பின்னுக்கு தள்ளி, தேசம், தேச பாதுகாப்பு போன்ற வற்றை முன்னிறுத் திய மோடி வெற்றி பெற்றுள்ளார்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கும், அவர் தான் நாட்டின் பிரதமர்!


- நமது சிறப்பு நிருபர் --


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-201901:07:08 IST Report Abuse

Tamilanஎப்படியோ, மிகுந்த கஷ்ட்டப்பட்டு, தனியாக ஜெயித்து விட்டார்கள். ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறார்கள்? . அண்டை நாடுகளுடனும் அந்நிய நாடுகளுடனும் போட்டிபோடுவதிலும் அந்நாட்டு கொள்கை கோட்பாடுகளை இந்தியாவில் திணிக்காமல், வளர்ந்த நாடுகளைப்போல் வீண் விரயங்களை பொருளாதார மாயைகளை இந்தியாவில் புகுத்தாமலும் இருந்தால் அதுவே மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் .

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-201915:29:19 IST Report Abuse

Tamilanஅத்துடன் சேர்ந்து பயங்கரவாத தாக்குதல்களும் அதற்க்கு பதிலாக பாகிஸ்தானில் குண்டுகள் போட்டதும் அனைத்துவிதமான மக்கள் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டதும் மோடிக்கு கிடைத்த வெற்றியுடன் சேர்ந்தது . இல்லையெனில் தொங்கு பாராளுமன்றத்தில் நாடே ஊசலாடிகொண்டிருக்க வேண்டிஇருந்திருக்கும்

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
24-மே-201910:32:07 IST Report Abuse

a natanasabapathy60 aandukalil congress seyyaathathai 5 aandukalil modi seythathe vertti kku mukkiya kaaranam avarai yethirthavarkal anaivarum ozhal peruchaalikal yenbathai thamizhaga makkalai thavira pirar nanku arinthullanar

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X