தேனி, ''300 கோடி ரூபாய் செலவு செய்யும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மகன் போன்றவர்கள்தான் இனி தேர்தலில் வெற்றி பெற முடியும்'' என அ.ம.மு.க., கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்செல்வன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தும்மக்குண்டு பகுதி ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஒருமணி நேரம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதுகுறித்த விபரம் அறிய அ.ம.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் , ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவை சந்திக்க ஏஜன்ட்களுடன் வந்தார். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பதட்டம் ஏற்பட்டது. பாஸ்கரன் எஸ்.பி., தலைமையிலான அதிரடிப்படையினர் கூட்டத்தினரை வெளியேற்றினர்.பின் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: இந்திய அளவில் பா.ஜ., தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுகின்றன. ஆனால் தேனி தொகுதியில் அ.தி.மு.க, முன்னிலை பெறுகிறது. ஆண்டிபட்டி தொகுதியில் ஒவ்வொரு 'பூத் கமிட்டி'யிலும் 12 பேர் இருந்தனர். ஆனால் இயந்திரத்தில் எங்களுக்கு ஓட்டு 'பூஜ்யம்' என காட்டுகிறது. ஓட்டுக்கு அ.தி.மு.க.,வினர் கொடுத்த ஆயிரம், இரண்டாயிரத்தை வாங்கி மாற்றி ஓட்டை போட்டுவிட்டார்களா?எங்களைப்போன்ற மக்கள் சேவை செய்வோருக்கு மரியாதை இல்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறதா எனத்தெரியவில்லை. அதன் மீது நம்பிக்கை இல்லை. ஒருமாதமாக ஏதோ சதி நடந்துள்ளது, என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE