அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஒன்றில் கூட தேறாத கூட்டணி கட்சிகள்:
அ.தி.மு.கவில் சோகம்

சென்னை, தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., - தே.மு.தி.க., கட்சிகள் ஓர் இடத்தில் கூட தேறவில்லை.

ஒன்றில், கூட, தேறாத, கூட்டணி ,கட்சிகள், அ.தி.மு.கவில் ,சோகம்



கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க., வே இரண்டு இடங்களில் தான் தேறியுள்ளது.கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில்37 தொகுதி களில்அ.தி.மு.க., வெற்றி பெற்றது. குமரியில் பா.ஜ., - பொன் ராதாகிருஷ்ணன் தர்மபுரியில் பா.ம.க., - அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்ற னர். தி.மு.க., வுக்கு ஓர் இடம் கூட கிடைக்க வில்லை.


தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. தமிழகத் தில் அ.தி.மு.க., தலைமையில் பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி யாக தேர்தலை சந்தித்தன. தி.மு.க., தலைமை யில் காங்., விடுதலை சிறுத்தைகள் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டன.


தமிழகத்தில் வேலுார் தவிர்த்து ௩௮ லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திர நாத் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட் பாளர் சந்திரசேகர் மட்டுமே முன்னணி யில்

உள்ளனர். மற்றபடி 77 இடங்களிலும் தி.மு.க., கூட்டணிகள் கட்சிகள் தான் முன்னிலை வகித்தன. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., கடைசியில் தான் இடம் பெற்றது.


அ.தி.மு.க. உடன் பேச்சு நடத்தும் போதே தி.மு.க., வுடனும் பேச்சு நடத்தியது. இறுதியில் அ.தி.மு.க., அணியில் நான்கு தொகுதிகள் தான் இந்த கட்சிக்கு ஒதுக்கப் பட்டன; நான்கிலும் தோல்வி அடைந்தது. பா.ஜ., கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை தோல்வியை தழுவினார். கட்சியின் மாநில தலைவர் தமிழிசை முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என போட்டியிட்ட அனைவருமே தோல்வி அடைந்தனர்.


பா.ம.க., வுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மட்டுமே இழுபறி நிலையில் சென்று கொண்டிருந்தார். மற்றபடி ஆறு இடங்களிலும் அக்கட்சியினர் மிகவும் பின்தங்கியிருந்தனர்.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் தோல்வியை தழுவினார். ஒரு இடத்தில் போட்டியிட்ட புதிய தமிழகமும் தோல்வியை தழுவுகிறது.


தி.மு.க., வை பொருத்தவரை லோக்சபாவில் பூஜ்ஜி யமாக இருந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., வும் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தமிழகத் தில் நான்கு தொகுதிகள் கிடைத்துள்ளன.காங்கிரஸ் கட்சி தேனி தொகுதியில் தோல்வி முகத்தில் உள்ளன.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுக்கு கூட்டணி கட்சிகளால் எந்த பலனும் இல்லை.



தர்மபுரி தொகுதியில்பா.ம.க., வுக்கு ஏற்கனவே

Advertisement

இருக்கும் செல்வாக்கு தான் அன்புமணியின் இழுபறிக்கு உதவியது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதிய சின்னத் தில் போட்டியிட்டதும் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம்.


பட்டாசு வெடித்ததும் சிட்டாய் பறந்தனர்!
ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ., கூட்டணி முன்னிலை பெற்றது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முன்னிலை பெற்றது. தேர்தல் முடிவு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., அலுவலகத்திற்கு கட்சி தொண்டர் கள் பட்டாசு, இனிப்புகளுடன் வந்தனர்.


லோக்சபா தொகுதிகளில் வெற்றி இல்லாத நிலையிலும் தங்கள் கட்சி ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற மகிழ்ச்சியில் பட்டாசுகளை கொளுத்தினர்; எடுத்து வந்த இனிப்புகளை வழங்கினர். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மதியத்திற்கு மேல் அலுவலகம் வெறிச்சோடியது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-201907:58:09 IST Report Abuse

M Rengarajஉலகத்திலேயே மிக உயர்ந்த கொள்கையும் கோட்பாடும் நிறைந்த பா ம க வை எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-201903:47:20 IST Report Abuse

R.PERUMALRAJA" SCHEME " என்னும் வார்த்தைக்கு பொருள் என்ன கேட்டு காவேரி நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்திய மோடியிற்கு " பூஜ்ஜியம் " என்று பதில் அளித்த தமிழகமக்களின் எண்ணத்தை வாக்குகளாக இன்று மதசார்பற்ற கூட்டணி அறுவடை செய்து இருக்கிறது . வேறு ஏதும் காரணமில்லை . ஆ தி மு க இதனால் கவலைகொள்ள தேவை இல்லை .

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
24-மே-201903:15:33 IST Report Abuse

கைப்புள்ளஎன்ன சொல்றது. செம சந்தோசமா இருக்கு.கல்யாண வீட்ல ரெண்டு மாசம் விருந்து சாப்பிட்ட மாறி அவ்வளவு ஒரு சந்தோஷம். மனசு நிம்மதியா நெறஞ்சு போயி கெடக்கு. நாடு இன்னும் ஒரு அஞ்சு வருசத்துக்கு கொள்ளைக்கார திருடர்கள் கைல இருந்து தப்பிச்சு இருக்குன்னு நினைக்கிறப்போ, நமக்கும் வாழ்க்கை உறுபடுவதற்கு ஏதோ ஒரு வாய்ப்பு கிடைக்கும்ன்னு தோணுது. மோடி எதிர்ப்பாளர்களை பற்றி எல்லாம் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. அது அப்படியே இருக்கட்டும், நாம போயி முன்னேறுவோம்.

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
24-மே-201920:59:32 IST Report Abuse

வந்தியதேவன்கைப்புள்ள... ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத....? “நாளைய பொழுதொன்றும் நம் கையில் இல்லை... அடுத்தடுத்த நடப்பும் நம் கையில் இல்லை...”...ன்னு கவியரசு கண்ணதாசன் எழுதியதைப் போல... எதுவும் நம் கையில் இல்லை...? நாளை என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்..? அவன் ஒருவனே அறிவான்.... அவன்தான் இறைவன்...? இதை ஏன் நா... சொல்றேன்னா...? அதை இறைவன் ஒன்றே அறிவான்.... பொறு... பொறு... கைப்புள்ள... “கைப்புள்ள இன்னுமா முழிச்சுருக்க... தூங்ங்குகுகுகுகுகுகுகுகுகுகுகுகு...? ...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X