பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடியது ஓட்டு எண்ணும் மையம்

Added : மே 24, 2019
Advertisement
 வெறிச்சோடியது ஓட்டு எண்ணும் மையம்

கடலுார்:கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கடலுார் லோக்சபா தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.முன்னதாக அரசியல் கட்சி முகவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின் உள்ளே அனுமதித்தனர். முகவர்கள் எடுத்துச் சென்ற மொபைல் போன்களை, போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் பெற்று செல்ல அறிவுறுத்தினர். கடலுாரில் ஓட்டு எண்ணிக்கை மையம் முன் ஒவ்வொரு தேர்தலின் போதும், கட்சி பிரமுகர்கள் முடிவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்திருப்பது வழக்கம். ஆனால் நேற்று ஓட்டு எண்ணிக்கையின் போது, எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வராததால் ஓட்டு எண்ணும் மைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X