பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை எதிரொலி ரயில் நிலையம் 'வெறிச்'

Added : மே 24, 2019
Advertisement
 ஓட்டு எண்ணிக்கை எதிரொலி  ரயில் நிலையம் 'வெறிச்'

விருத்தாசலம்:லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை விடுமுறையை கொண்டாட, சுற்றுலா தலங்களுக்கும், கோவில்களுக்கும், பொதுமக்கள் படையெடுத்தனர். ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இந்நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும், 14 தொகுதிகளின் சட்ட சபை இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் நேற்று காலை துவங்கியது. இதனால், கோடை விடுமுறை கொண்டாட்டத்திற்கு நேற்று விடை கொடுத்து விட்டு, 'டிவி' முன்னால் அமர்ந்து நாட்டு நிலவரங்களை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.இதனால், விருத்தாசலம் ரயில் நிலையம் மக்கள் நாடமாட்டம் அகமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், சென்னையிலிருந்து விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் வைகை மற்றும் காரைக்கால் - பெங்களூர்; சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்களில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X