பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் அருகே தீ விபத்து மூன்று கூரை வீடுகள் சேதம்

Added : மே 24, 2019
Share
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.
சிதம்பரம் அருகே மணலுாரை அடுத்துள்ள பாலுத்தாங்கரையில் வசிப்பவர் ஏழைமுத்து,60; இவரது கூரை வீடு நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. வேகமாக பரவிய தீ அடுத்துள்ள செல்வதுரை, 50; கஜேந்திரன்,45; ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவியது. சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர் ரங்கபாஷ்யம் தலைமையில் வந்திருந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X