பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவில் 'வெறிச்'

Added : மே 24, 2019
Advertisement
 காட்டுமன்னார்கோவில் 'வெறிச்'

காட்டுமன்னார்கோவில்:ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. காட்டுமன்னார்கோவில் நகர வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அவர்களும் மாலையில் கடையை அடைத்தனர். சிதம்பரம் தொகுதியில், தி.மு.க.,கூட்டணியில் திருமாவளனும், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரும் போட்டியிட்டனர். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போதும், இரு வேட்பாளருக்கும் இடையே சொற்ப அளவிலேயே வித்தியாசம் இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதனால், வியாபாரிகள் கடைகளை முற்றிலும் அடைத்தனர். காட்டுமன்னார்கோவில் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X