பொது செய்தி

தமிழ்நாடு

எலும்புக்கூடாக மாறிய 'அம்மா' உணவகம்! கண்காணிப்பு இருந்தும் களவாடுவது யார்?

Added : மே 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 எலும்புக்கூடாக மாறிய 'அம்மா' உணவகம்!  கண்காணிப்பு இருந்தும் களவாடுவது யார்?

கோவை:கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில், 'அம்மா' உணவகத்துக்கு அமைத்த, 'ெஷட்'டில் இரும்பு பலகைகள், இரும்பு கம்பங்கள், கம்பிகள் ஒவ்வொன்றாக மாயமாகி வருகின்றன.ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள், டிரைவர்கள், தினக்கூலி பணியாளர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்களின் பசியை போக்குவதற்காக, 2013, மார்ச் 19ல் 'அம்மா' உணவகம் திறக்கப்பட்டது.
கோவையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில், அரசு மருத்துவமனை, வரதராஜபுரம், போத்தனுார், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட, 12 இடங்களில், 'அம்மா' உணவகம் நடத்தப்படுகிறது.மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக வளாகத்துக்குள், உணவகம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆதார் மையத்துக்கு அருகே இடம் ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல லட்சம் ரூபாய் செலவழித்து, ' ெஷட்' அமைக்கப்பட்டது.ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், பணியை கிடப்பில் போட்டு விட்டனர். அன்று முதல் இன்று வரை அத்திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித முனைப்பும் காட்டவில்லை.
ஆனால், அமைக்கப்பட்ட 'ெஷட்'டில் இருந்து இரும்பு பலகை, இரும்பு கம்பங்கள் ஒவ்வொன்றாக காணாமல் போகின்றன. வடக்கு மண்டல அலுவலக வளாகம் முழுவதும், 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.அலுவலக வளாகம், 'பார்க்கிங்' ஏரியா, ரோட்டில் செல்வோர் என, அனைத்து பகுதிகளிலும், கேமராவில் பதிவாகும் காட்சிகள், கண்காணிக்கப்படுகின்றன.
நுழைவாயிலில், ஒப்பந்த காவலாளியும் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வளவு கண்காணிப்பு இருந்தபோதிலும், 'அம்மா' உணவகத்துக்கு போடப்பட்ட 'ெஷட்'ல் இருந்து பொருட்கள் மாயமாகி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே திருடர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்குள்ளேயே இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மே-201915:12:57 IST Report Abuse
Natarajan Ramanathan அதிகாலை மூன்று மணிக்கு கையில் பிட் நோட்டீஸ், வாளியில் பசையுடன் சிலர் வந்து திநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் அசிங்கமாக நோட்டீஸை ஒட்டிவிட்டு செல்கிறார்கள்...... காவலாளிக்கு தினமும் பணம் கிடைக்குது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X