பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் சின்னையாவுக்கு பதவி நீட்டிப்பு தந்தால் போராட்டம் நடத்த முடிவு

Added : மே 24, 2019
Advertisement

மதுரை, :மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் சின்னையா ஜூன் 9ம் தேதி பணிஓய்வு பெற உள்ள நிலையில், உயர் கல்வி அதிகாரி ஒருவர் ஆசியோடு பதவியில் நீடிக்க முயற்சிப்பதற்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாஜி துணைவேந்தர் செல்லத்துரை காலத்தில் பதிவாளர் பொறுப்பேற்றவர் சின்னையா. இவர் புதிய பதிவாளர் நியமனம் செய்யப்படும் வரை அப்பதவியில் நீட்டிக்க முயற்சிக்கிறார்.பல்கலை விதிப்படி பதிவாளர் பதவி மூன்று ஆண்டுகள். தகுதியிருக்கும்பட்சத்தில் மீண்டும் ஒருமுறை நீட்டிப்புக்கு தகுதி உண்டு. ஆனால் சின்னையாவிற்கு 58 வயது என்பதால் அவரால் பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அதேநேரம், சிண்டிகேட், செனட் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நீட்டிப்புக்கு வாய்புண்டு.விதிமீறல் சிக்கல்இப்பல்கலை மாஜி துணைவேந்தர் செல்லத்துரை காலத்தில் விதிமீறல் புகார்கள் எழுந்தன. அதில் முக்கிய பங்கு பதிவாளர் சின்னையாவிற்கு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதன் விளைவாக உயர்கல்வி கூடுதல் செயலாளர் கடிதம் அடிப்படையில் (கடிதம் எண்:446/எச்2/2019-1) பிப்.,5 ல் நடந்த பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், 'செல்லத்துரை காலத்தில் விதிமீறி நியமிக்கப்பட்டதாக சி.எல்.ஆர்., மற்றும் கவுரவ விரிவுரையாளர் நியமனங்களை விசாரிக்க குழு அமைக்க துணைவேந்தருக்கு அதிகாரம் வழங்கியும், அந்த குழு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் (எண்:87) நிறைவேற்றப்பட்டது'.எனவே இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்குள் பதிவாளர் சின்னையாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என மதுரை காமராஜ் பல்கலை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவர்னர், உயர்கல்வி செயலாளர், துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறியதாவது: செல்லத்துரைக்கு துணைவேந்தர் பதவி கிடைத்தவுடன், அவருக்கு பிஎச்.டி., வழிகாட்டியாக இருந்த சின்னையாவிற்கு பதிவாளர் பதவியை பெற துணை புரிந்தார். இவர் மீது பல புகார்கள் எழுந்தன. ஓய்வு பெறவுள்ள நிலையில் சின்னையா, உயர்கல்வி அதிகாரி ஒருவர் துணையுடன் பதவி நீட்டிப்பிற்கு முயற்சிக்கிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். தற்போது துணைவேந்தர் கிருஷ்ணனின் பணி பாராட்டத்தக்கதாக உள்ளது. எனவே காலியாகும் பதிவாளர் பதவியை நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும். பதவி நீட்டிப்பு வழங்கினால் அவருக்கு எதிராகவும், உயர்கல்வி அதிகாரிக்கு எதிராகவும் பல்கலையில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அரசியல் பின்னணியில் ஆரம்பிச்சது போட்டி...

அரசியல் பின்னணியில் பதிவாளர் பதவியை கைப்பற்ற பலர் காய் நகர்த்துகின்றனர். இப்பல்கலையில் தேர்வாணையராக உள்ள ரவியும் முயற்சிக்கிறார். ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்து வரும் நிலையில் இதுவரை அவருக்கு அயற்பணிக்கான அனுமதி (லீன்) வழங்கப்படவில்லை. 'அயற்பணிக்கான அனுமதி வழங்கப்படாதபட்சத்தில் அவர் எப்படி தேர்வாணையர் பதவியில் நீடிக்கலாம்' என அரசு கேள்வி எழுப்பிய நிலையில், அரசியல் பின்புலத்தால் பதிவாளர் பதவியை பெற்றுவிட காய் நகர்த்துகிறார். இவர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜேசுராஜா என்பவர் தொடர்ந்த வழக்கு(9572/2019) நிலுவையில் உள்ளது. மேலும் பலரும் அமைச்சர்களை பிடித்து பதவியை பெற தயாராகி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X