புதுடில்லி, 'மக்கள் வருவாயை சீரமைத்து, வங்கி மற்றும் வரித் துறைகளில் ஒத்தி வைத்த சீர்திருத்தங்களை விரைந்து நிறைவேற்ற, மத்தியில் அமையும் புதிய அரசு, முன்னுரிமை தர வேண்டும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.இதையடுத்து, மத்தியில், பிரதமர் மோடி தலைமையில் மீண்டும், பா.ஜ., அரசு அமைய உள்ளது.இந்நிலையில், புதிய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இலா பட்நாயக், பேராசிரியர், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை மையம்:புதிய அரசு, முன்னுரிமை அடிப்படையில், மக்களின் வருவாயில் காணப்படும் ஏற்றத்தாழ்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியம். பல ஆண்டுகளாக, இதை நிறைவேற்றாமல் தள்ளி வைத்துள்ளோம்.இரட்டை நிதி நிலை அறிக்கை நடைமுறைக்கு தீர்வு காண வேண்டும். நாட்டின் பொருளதாரத்திற்கு, வங்கிகளின் கடன் வளர்ச்சி முக்கியம்.அரசு, இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள், குறிப்பாக, திவால் சட்டம், வங்கிகளின் வாராக் கடனை சீரமைக்க உதவினாலும், அது போதிய அளவிற்கு இல்லை எனலாம். வங்கிகளின் நிதிச் செயல்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தி, நிதியாண்டிற்கான வருவாய் இலக்கிற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.இவற்றை செயல்படுத்த, புதிய அரசு, முன்னுரிமை தர வேண்டியது அவசியம்.பங்கு விற்பனைரதின் ராய், இயக்குனர், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை மையம்:வருவாய்க்கு இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப வரி விகிதங்களை மாற்றுவது, பரவலான பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. எனவே, எதிர்கால கணிப்பின் அடிப்படையில், வரிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அக்கொள்கையை உருவாக்குவோர், அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.வருவாய் குறைவை சரிகட்ட, தற்காலிக தீர்வாக, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை, அரசு விற்பனை செய்கிறது. இதைவிட, தீர்க்கமான செயல் திட்டத்துடன், பொதுத் துறை பங்கு விற்பனையை மேற்கொண்டால், ஸ்திரமான வருவாய் கிடைக்கும்.முக்கியமாக, அரசு பொருளாதார நிர்வாக சீர்திருத்தங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வறுமையை போக்கி, மக்களின் சமச்சீரற்ற வருவாய்க்கு தீர்வு காண, புதிய அரசு, உடனடியாக பணிகளை துவக்க வேண்டும்.
செல்வ வரி
பார்த்தசாரதி ஷோம், ஐ.மு., கூட்டணி அரசில், நிதியமைச்சரின் ஆலோசகராக பணியாற்றியவர்:வறுமை ஒழிப்பு தொடர்பான தவறான தகவல்களை தடுப்பதற்கு, புதிய அரசு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். முறையற்ற வகையில் சொத்துக்கள் குவிக்கப்படுவதை தடுத்து, வருவாய் வினியோகத்தை மேம்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், இந்த அம்சங்கள் குறித்து, நாம் வெளியிடும் தகவல்களுக்கு மாறாக, உலக வங்கி மற்றும் ஐ.நா.,வின் தரவுகள் உள்ளன.ஆண்டுக்கு, 5 - 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, 45 சதவீதம், 'பெருவருவாய் வரி' விதிக்கலாம். 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்கு, செல்வ வரி விதிக்கலாம். இதற்கு, ஒருவரின் நிதி மற்றும் நிதிசாரா சொத்துக்களை கணக்கில் கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE