காந்திபுரம் பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கலாம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்திபுரம் பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கலாம்!

Added : மே 24, 2019
 காந்திபுரம் பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கலாம்!

கோவை:கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழே, துாண்களுக்கு இடையே உள்ள மையத்தடுப்பில், ஆக்கிரமிப்பை தடுக்க, இரும்பு கிரில் அமைத்து, பூங்கா ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோவை, காந்திபுரம், நஞ்சப்பா ரோட்டில், சர்க்கஸ் மைதானம் சந்திப்பில் இருந்து 'டெக்ஸ்டூல்' பாலத்துக்கு முன்பு வரை, 1.75 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
மொத்தம், 55 துாண்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு துாணுக்கும் இடைப்பட்ட பகுதியில், மையத்தடுப்பு அமைக்கப்பட்டு, மண் கொட்டி, சமன்ப்படுத்தப்பட்டு உள்ளது. சர்க்கஸ் மைதானம் சந்திப்பில், பெரிய அளவில் 'ரவுண்டானா' அமைக்கப்பட்டு இருக்கிறது.'ரவுண்டானா' மற்றும் மையத்தடுப்பை சுற்றிலும், இரும்பு 'கிரில்' அமைத்து, நடுவில் பூங்கா ஏற்படுத்தலாம். ஆங்காங்கே நீரூற்று அமைக்கலாம். இதனால் வாகன ஓட்டிகளுக்கு துாசு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.தனியார் நிறுவனங்கள் பலவும், சமுதாய பொறுப்பு திட்டத்தில் இப்பணிகளை செய்ய, தாமாக முன்வந்துள்ளன. ஆனால், எந்த நிறுவனத்துக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை, அனுமதி கொடுக்காமல் இருக்கிறது.
அத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாலத்தில் துாண்களுக்கு இடையே மையத்தடுப்புகளில் பூங்கா அமைத்தால், நன்றாக இருக்கும். ஆக்கிரமிப்பு உருவாகாது; பிச்சைக்காரர்கள் படுத்துறங்கும் இடமாக மாறாது. ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு அனுமதி அளித்தால், தேவையற்ற சர்ச்சை ஏற்படும். சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், கலெக்டர் முடிவெடுத்து, நிதி ஒதுக்கீடு செய்தால், அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்' என்றனர்.'ரவுண்டானா' மற்றும் மையத்தடுப்பை சுற்றிலும், இரும்பு 'கிரில்' அமைத்து, நடுவில் பூங்கா ஏற்படுத்தலாம். ஆங்காங்கே நீரூற்று அமைக்கலாம்.
தனியார் நிறுவனங்கள் பலவும், சமுதாய பொறுப்பு திட்டத்தில் இப்பணிகளை செய்ய, தாமாக முன்வந்துள்ளன. 'ஒளி விளம்பரத்துக்கு 'நோ' சொல்லணும்'பாலத்தின் நடுவே பூங்கா அமைப்பது நல்ல யோசனைதான். ஆனால் ஒளி கக்கி, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் விளம்பரங்களுக்கு, அனுமதி அளித்து, கோர்ட் உத்தரவை மீறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X