பொது செய்தி

தமிழ்நாடு

13 சென்ட் 'ரிசர்வ் சைட்' கிரையம் மீட்காமல் மாநகராட்சி தாமதம்

Added : மே 24, 2019
Advertisement

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 13 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஏழு நபர்களுக்கு 'கிரையம்' செய்யப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போதிலும், நிலத்தை மீட்காமல், நகரமைப்பு பிரிவினர் தாமதித்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 85வது வார்டு, பிரபு நகரில், 13 சென்ட் 'ரிசர்வ் சைட்', ஏழு நபர்களுக்கு, 64 லட்சம் ரூபாய்க்கு, 2009ல் விற்கப்பட்டுள்ளது. கிரையம் பெற்றவர்கள், 2011ல் கட்டட அனுமதி கேட்டு, மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது, நிராகரிக்கப்பட்டது.
நியாயம் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி கமிஷனர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் மீது, 'ரிசர்வ் சைட்'டை வாங்கியவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், கிரைய பத்திரமே செல்லாது என கூறி, தள்ளுபடி செய்து விட்டது.உத்தரவு வழங்கி, ஆறு மாதங்களாகி விட்டது. நிலத்தை கையகப்படுத்தாமல் நகரமைப்பு பிரிவினர் தாமதித்து வந்தனர்.
இத்தகவல் அறிந்ததும், நிலத்தை மாநகராட்சி வசம் எடுக்க, துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி உத்தரவிட்டார்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஐகோர்ட் உத்தரவு நகல் பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தின் வரைபடம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, மாநகராட்சி வசம் நிலத்தை கையகப்படுத்த, தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X