பதிவு செய்த நாள் :
உ.பி.,யில் எடுபடாத பிரியங்கா 'மேஜிக்'

புதுடில்லி,:களை இழந்து போன காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில், புதிய உற்சாகத்தை பாய்ச்சிய பிரியங்காவின் வரவு, அக்கட்சியின் வெற்றிக்கு, எந்த விதத்திலும் பயன் அளிக்கவில்லை என்பது காங்., தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், எடுபடாத ,பிரியங்கா, 'மேஜிக்'லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு, புதிய உற்சாகத்தை அளிக்க, சோனியாவின் மகளும், காங்., தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்காவை அக்கட்சி களம் இறக்கியது. கிழக்கு உத்தர பிரதேசத்திற்கான பொது செயலராக பிரியங்கா நியமிக்கப்பட்டார்.


மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், கணவர், குழந்தைகள் என்றே இருந்த பிரியங்கா, அவ்வப்போது அரசியல் களத்திலும் தலைகாட்ட தவற வில்லை. கடந்த 1999ல், உ.பி.,யின் அமேதி லோக்சபா தொகுதியில்,சோனியா போட்டியிட்ட

போது, அவருக்காக பிரியங்கா பிரசாரத்தில் ஈடுபட்டார். இது தான் அவரது, அதிகாரப்பூர்வமான முதல் அரசியல் பிரவேசம்.
அதன் பின், 2004ல், ராகுலுக்காக, அமேதி தொகுதியில் பிரசாரம் செய்தார்.இதன் பிறகு, அரசியல் மேடைகளில் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில், 2019 லோக்சபா தேர்தலில், காங்.,குக்கு மக்களை கவரும் 'மேஜிக்' தேவைபட்டது. எனவே, பிரியங்காவை களம் இறக்க கட்சி தலைமை திட்டமிட்டது.காங்.,நினைத்ததை போலவே, மக்களை கவரும் பணியை, சிறப்பாகவே செய்தார் பிரியங்கா. பிரசாரத்தின் போது அவர் கடைபிடித்த எளிமை, மக்களுடன் நெருங்கிப் பழகிய விதம், மோடி ஆதரவாளர்களுக்கே வாழ்த்து சொல்லி கவனத்தை ஈர்த்தது என, அவரது பிரசார உத்திகள் அனைத்தும் சரியாகவே இருந்தன.மேலும், அவரது பாட்டி இந்திராவின் சாயல் இருப்பது, பிரியங்காவுக்கு சாதகமான அம்சமாகவேபார்க்கப்பட்டது.இவ்வளவு சாதகங்கள் இருந்தும், அது காங்., வெற்றிக்கு துளியும் கை கொடுக்கவில்லை என்பது, அக்கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரையும் விரக்தி அடைய செய்துள்ளது. காங்., பொது செயலராக பொறுப்பேற்ற நாளில்

Advertisement

இருந்தே, 'என்னால் எந்த 'மேஜிக்'கும் நிகழ்ந்து விடாது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து உறுதிபடுத்த வேண்டியதே முதல் தேவை' என, பல முறை கூறினார்.


உ.பி., காங்., வேட்பாளர்கள் தேர்வு பற்றி கேட்டபோது, 'காங்., வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என தெரியாது. ஆனால், பா.ஜ., வின் பெரும்பான்மையான ஓட்டை பெறுவார் கள்' என, யதார்தமாக பதில் அளித்தார்.'அரசியலில், இந்த யதார்த்த அணுகுமுறை பயன் அளிக்காது' என, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


காங்., தலைவர்களும், தொண்டர்களும் பெரி தாக நம்பிக் கொண்டிருந்த பிரியங்கா 'மேஜிக்' இந்த தேர்தலில் சரிவர பலன் அளிக்காதது, அக் கட்சி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-201914:15:18 IST Report Abuse

J.V. Iyerஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போன்று தான் பிரியங்கா வாதரா. உறவு முறை அவ்வளவே. இவர்களில் தீபா ஒருபடி மேல். ப்ரியங்காவுக்கு அவர் கணவர் ராபர்ட் ஒரு இடைஞ்சல்.

Rate this:
Bala - Chennai,இந்தியா
24-மே-201921:12:30 IST Report Abuse

Balaஇது என்ன 1950களா? பாம்பு வித்தை காட்டி மக்களை கவர்ந்து இழுக்க. இவருக்கு என்ன தகுதி? நேரு குடும்பத்து வாரிசு என்றால் உடனே சிலர் ஓடி போய் வேடிக்கை பார்ப்பார்கள். அவ்வளவுதான். கடைசியில் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மே-201918:19:10 IST Report Abuse

Natarajan Ramanathanஇவரது பிரச்சாரம் ஒன்றை உபியில் கேட்க நேர்ந்தது. முற்றிலும் வேஸ்ட். ஒன்றுமே விஷயம் இல்லாமல் சொன்னதையே சொல்கிறார். துளியும் ஈர்ப்பு இல்லை.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X