பதிவு செய்த நாள் :
ராகுல் அரசியல் வாழ்க்கை
கேள்விக்குறியாகிறதா

புதுடில்லி:தொடர் தோல்வி எதிரொலியால் ராகுலின் அரசியல் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. ராகுலின் தலைமை மீது காங். தொண்டர்கள் நம்பிக்கை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 ராகுல்,அரசியல், வாழ்க்கை, கேள்விக்குறியாகிறதா



'என்னை ஒருமுறை முட்டாளாக்கினால் உனக்கு தான் அவமானம்; இரண்டு முறை நான் முட்டாளாக்கப்பட்டால் எனக்கு தான் அவமானம்' என பெரியவர்கள் சொல்வது உண்டு. இது ராகுல் விஷயத்தில் பலித்து விடும் போல் தெரிகிறது.

காங். தலைவராக இருந்த சோனியாவுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் ராகுல். 'இளம் தலைமையின் கீழ் வெற்றியை பறிப்போம்' என்ற

முழக்கத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.


ஆனால் அடுத்தடுத்து நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து ராகுலின் தலைமை திறமையை கேள்விக்குறி யாக்கியது. ஆனாலும் 'ரபேல்' போர் விமானஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக ஒரு புகாரை கூறி தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். பார்லிமென்டில் பிரதமர் மோடியை கட்டியணைத்து 'அடடே' என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பெரிய வெற்றி கிடைத்தது என கூற முடியாவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியில் அமர்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதனால் லோக்சபா தேர்தலிலும் ராகுல் சாதிப்பார் என்றே கருதப்பட்டது.


ஆனால் உ.பி.யில் தான் போட்டியிட்ட அமேதி தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடிய வில்லை.இது காங்கிரஸ் பாரம்பரியமாக வெற்றி பெற்ற தொகுதி. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை. காங்.,க்கு

Advertisement

கேரளா பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடி யாக தமிழகத்தில் அந்த கட்சிக்கு அதிக தொகுதி களில் வெற்றி கிடைத் தாலும் அந்த வெற்றிக்கு ராகுலால் முழுமை யாக சொந்தம் கொண்டாட முடியாது.தி.மு.க. தலைமையி லான கூட்டணியில் போட்டி யிட்டதால் தான் காங்கிரசுக்கு வெற்றி கிடைத் ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


தொடர் தோல்விகளால் ராகுலுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதோ இல்லையோ அவரது கட்சியினர் ரொம்பவே சோர்வடைந்துள்ளனர். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-மே-201917:29:00 IST Report Abuse

Malick Rajaபல அறிவிலிகளும் தங்களின் நிலையறியாமல் உளறிக்கொட்டி இருப்பது அனுதாபத்திற்குரியது .. வெற்றிகள் யாருக்கும் பட்டா வாக யாருக்கும் வழங்கப்படவில்லை . அதேபோல தோல்வியும் யாருக்கும் ஒப்பந்தமும் செய்யவில்லை .. 20.வயதுவரை பிளாட்பாரத்தில் தேனீர் விற்றவரும் பிரதமராக காணக்கூடிய நாடு இந்தியா .. அவரருக்குரிய ஏற்றத்தாழ்வுகள் வருவதும் போவதும் இயற்க்கை .. எனவே வெற்றி என்று பீத்திக்கொள்வதும் .. தோல்வி என்று கவலை கொள்வதும் அறிவீனர்களுக்குரியது ..

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-மே-201905:33:17 IST Report Abuse

Manianஅப்பா ராசா அவரு தேனி கடை வைத்து முதல்வன் ஆனார், நீ ஓடடகம் மேய்க்க அங்கே ஏன் போனே. இங்கே இருந்து நாடடை ஏன் சீர்திருத்தவில்லை. ? ...

Rate this:
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
24-மே-201920:15:17 IST Report Abuse

Sundaram Bhanumoorthyதீர்க்க தரிசி சோ சொன்னது போல காங்கிரஸ் நாட்டுக்கு தேவை.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-மே-201919:33:55 IST Report Abuse

oceஅரசியல் ஆட்சி என எதையும் பிடிக்காமல் ஒரு கட்சியை ஆரம்பித்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்தாலே அக்ட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். கட்சி ஆரம்பிக்கும் முன்னரே தேர்தலில் நின்றால் எப்படி. இப்படிப்பட்ட ஆட்கள் சம்பாதிக்க கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற கருத வேண்டும்.

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X