பொது செய்தி

தமிழ்நாடு

அகத்தியே வாழைக்கு காவலன்: மாத்தி யோசிக்கும் விவசாயிகள்

Added : மே 24, 2019
Advertisement
 அகத்தியே வாழைக்கு காவலன்: மாத்தி யோசிக்கும் விவசாயிகள்

பேரூர்:தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பின், வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், வாழை பயிரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிளவில் பயிரிடப்பட்டுள்ளது.அவ்வாறு பயிரிடப்படும் வாழை மரங்கள், பலத்த காற்றின் போது தாக்குப்பிடிக்காமல் சாய்ந்து விடுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், காற்றிலிருந்து வாழை மரங்களை காப்பாற்ற, அகத்தி மரங்களை வாழை தோப்பைசுற்றியும் நட்டு, காற்றுத் தடுப்பானாக பயன்படுத்ததுவங்கியுள்ளனர்.
தற்போது, ஒரு வாழை இலை கட்டு, ரூ. 250 -300 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.விவசாயிகள் சிலர் கூறியதாவது:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சில நாட்களுக்கு முன்புவீசிய சூறை காற்றுக்கு, பல நுாறு ஏக்கரில் பயிரிட்ட வாழைகள் சாய்ந்தன. இது போன்ற துயரங்களைதவிர்க்க, அகத்தி மரங்களை வளர்த்து, காற்று தடுப்பானாக பயன்படுத்துகிறோம். இத்துடன், மரத்தின்கிளைகளை வெட்டி, வாழைக்கு 'முட்டு' கொடுக்கிறோம். அகத்திஇலைகள் மாடுகளுக்கு சிறந்த தீவனமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X