கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், உலக தேனீ தினம் பல்கலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருட்கள், தேனீ தொடர்பான ஆராய்ச்சிகள், தேனீ கூட்டங்களை பராமரித்தல், தேன் எடுத்தல், மருத்துவ பயன்பாடுகள் என பல்வேறு தலைப்புகளில், வல்லுநர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
Advertisement