பொது செய்தி

தமிழ்நாடு

நலச்சங்கம் உறுதிமொழி

Added : மே 24, 2019
Share
Advertisement
வேளச்சேரி: தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தி, வேளச்சேரி நலச்சங்கத்தினர், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.வேளச்சேரி, டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.இதில், குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்று, தண்ணீர் சிக்கனம் குறித்து
 நலச்சங்கம் உறுதிமொழி

வேளச்சேரி: தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தி, வேளச்சேரி நலச்சங்கத்தினர், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.வேளச்சேரி, டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.இதில், குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்று, தண்ணீர் சிக்கனம் குறித்து பேசினர். அதேபோல், நிலத்தடி நீர்மட்டம்அதிகரிக்க, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, அனைத்து வீடுகளிலும் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அதிகாரிகள் பேசினர்.இதைத் தொடர்ந்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; மண்வளத்தை காக்க மழைநீரை சேமிப்போம்; மரம் வளர்ப்பதை உறுதி செய்வோம் போன்ற வாசகங்களுடன், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், நலச்சங்க நிர்வாகிகள், பகுதிமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X