பொது செய்தி

இந்தியா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா ஜிப்மர் கலையரங்கில், 26ல் நடக்கிறது

Added : மே 24, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா கொண்டாட்டம், வரும் 26ம் தேதி ஜிப்மர் கலையரங்கில் நடக்கிறது.
புதுச்சேரி ஹீமோபிலியா சங்கம் துவங்கி, 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, வரும் 26ம் தேதி காலை 9:00 மணியளவில், கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் அரங்கத்தில், வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இது, நாற்பெரும் விழாவாக நடக்கிறது.விழாவிற்கு, டில்லியில் உள்ள இந்திய ஹீமோபிலியா இணைய தலைவர் விகாஸ் கோயல் தலைமை தாங்குகிறார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவகொழுந்து, முன்னாள் முதல்வர் ரங்கசாமி, சங்க புரவலர் ஜான்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும், மருத்துவ வல்லுனர்களான ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், சுகாதாரத் துறை இயக்குனர் ராமன், தேசிய சுகாதார சங்க டாக்டர் மோகன்குமார், ஸ்ரீ பாலாஜி வித்யாபீடம் துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா ஆகியோர் பங்கேற்று, உரையாற்றுகின்றனர்.மதிய நிகழ்வில், ஹீமோபிலியா கூட்டமைப்பின் தென் பிராந்திய பிரதிநிதிகள் கூட்டம், பிரேம் ரூப் ஆல்வா தலைமையில் நடக்கிறது. இதில், 30 சங்கங்கள் பங்கேற்கின்றன.விழாவில், ஹீமோபிலியா சங்கத் தலைவி டாக்டர் நளினியின் 75வது பிறந்த நாள், உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்படுகிறது.ஏ.வி.எம். திரைக்குடும்பத்தை சேர்ந்த அபர்ணா குகன் ஷ்யாம், பாடல் குழு 'ஜோ - ஏச் 2 ஓ' பாண்ட் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சங்கத் தலைவர் வீரமணி, செயலர் பென்னோராயன், பொருளாளர் ஜெயபால் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு, சங்கத் தலைவர் டாக்டர் நளினி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X