அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., வெற்றி; அ.தி.மு.க., தோல்வி
15 ஆண்டுக்கு பின் திரும்பிய வரலாறு

சென்னை:லோக்சபா தேர்தலில் 15 ஆண்டு களுக்கு பின் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வுக்கு வரலாறு திரும்பியுள்ளது. ஆனால் இரண்டு கட்சிகளும் மத்திய ஆட்சியில் அதிகாரம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .லோக்சபா தேர்தல் முடிவு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திஉள்ளன.

 தி.மு.க., வெற்றி; அ.தி.மு.க., தோல்வி, 15 ஆண்டுக்கு பின் திரும்பிய ,வரலாறுஇந்த தேர்தலில் கட்சிகளின் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றி தோல்விகள் அமைந்து உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., வை பொருத்தவரை தங்கள் கூட்டணி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க., அணி பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த முடிவானது அ.தி.மு.க., தலைமைக்கு தக்க பாடத்தை கொடுப்பது போல அமைந்து
உள்ளது.


இந்த படுதோல்வியானது 2004 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போனதை

நினைவுபடுத்துவதாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் அ.தி.மு.க., வின் தோல்வி வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது. அதேபோல் தி.மு.க., கூட்டணி யின் அமோக வெற்றியானது 15 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி வரலாறு திரும்பியதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதி களிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று மகுடம் சூடியதுடன் மத்தியிலும் ஆட்சிஅதிகாரத்தில் முக்கிய பங்காற்றியது.


இந்த முறை 15 ஆண்டுகளுக்கு முன் பெற்ற அதே வெற்றியை தி.மு.க., பெற்றாலும் மத்தியில் எதிர் கூட்டணியான பா.ஜ. மிகப் பெரிய வெற்றி பெற்று தி.மு.க., வுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.எனவே 15 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி வரலாறு தி.மு.க., வுக்கு திரும்பினாலும் அப்போதைய நிலையை போல் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.2009ல் காங்., - 2019ல் பா.ஜ.,


லோக்சபா தேர்தலில், ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது புதிதல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், காங்கிரசுக்கு, இதே வெற்றி தான் கிடைத்தது. கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 145 இடங்களிலும், பா.ஜ., 138 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சிஅமைந்தது.


இதையடுத்து, 2009ல் லோக்சபா தேர்தல் வந்தது. அப்போது, மன்மோகன் சிங், 'பொம்மை பிரதமர்' என்று விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரசுக்கு எதிராக, பல்வேறு ஊழல் வழக்குகள் வரிசை கட்டி நின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை,

Advertisement

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான போர் விவகாரம், பெரும் பிரசார ஆயுதமாக அமைந்தது. அந்த தேர்தலின் போது, இலங்கை யில் நடந்த போரில், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இதற்கு, இந்திய ராணுவம் தான் உதவியது என்றும், அதனால், மத்திய காங்கிரஸ் அரசு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாகவும், தமிழக கட்சிகள் பிரசாரம் செய்தன. மற்ற மாநிலங்களில், காங்கிரசின் ஊழல்கள் குறித்து பிரசாரம் நடந்தது.அதனால், 2009 தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என, பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார்.தமிழகத்தில், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியின் வெற்றி, பாதியாக குறைந்தது. அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் வென்றது. இதை போலவே, இப்போது நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி மீதும், பா.ஜ., மீதும் கடும் குற்றச்சாட்டுகள் வைக்கபட்டன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை துாள் துாளாக்கி, பா.ஜ., மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201911:58:24 IST Report Abuse

Pugazh Vசும்மா சும்மா திமுக கொள்ளை என்று புலம்புவதை நிப்பாட்டுங்கள். ஆதாரங்கள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து, இது போன்ற அடிப்படை யற்ற வார்த்தை களை எழுதுவதை நிறுத்த வும்.

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
29-மே-201915:49:45 IST Report Abuse

Yaro Oruvanயோக்யரு வர்றாரு.. செம்பெடுத்து உள்ள வயின்னானாம்.. ஊழலுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு சொல்வாங்க தினா முனா கானா மந்திரி கும்பல்.. அதுக்கு அர்த்தம் என்னன்னா, உண்மையிலயுமே பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காததால மெய்யாலுமே ஸ்பெல்லிங் தெரியாது ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201911:54:02 IST Report Abuse

Pugazh V"பெருக்கத்து வேண்டும் பணிதல்..சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு" // யோசிச்சுக்கோங்க.

Rate this:
vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ
25-மே-201909:13:13 IST Report Abuse

vinaikumarவெளிநடப்புகள் ஆர்பாட்டங்கள் அம்மண போராட்டங்கள் என்று இனி டெல்லியில் களை கட்டும். என்ன இதுவரை இவர்களின் கைக்கூலிகள் ஆடிய ஆட்டங்களை இனி எம்பிக்கள் ஆடுவார்கள். மாநில நலன்களை விட தன் நலம் மற்றும் கட்சியின் நலன்களை மட்டுமே இவ்ர்களிடிம் எதிர்பார்க்க முடியும். ஒவ்வொருத்தரும் ஐம்பத்திலிருந்து 100 கோடி வரை செலவு செய்துவிட்டு இப்போது அதை எப்படி மீட்கப்போகிறோம் என்று கவலையோடு ஒக்காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு எம்பிக்கும் தொகுதி நிதி ரெண்டு கோடி கிடைக்கும் அதில் ஒன்றும் பெரிதாக சுருட்டமுடியாது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு நிறைய பணம் வேண்டும் அதற்குள் யார் தாலிய அறுக்கப்போறாங்களோ?

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X