எண்ணுார் - கும்மிடிப்பூண்டி இடையே சிக்னல் மேம்படுத்த நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணுார் - கும்மிடிப்பூண்டி இடையே சிக்னல் மேம்படுத்த நடவடிக்கை

Added : மே 24, 2019
Share

எண்ணுார் - கும்மிடிப்பூண்டி இடையே, 3.35 கோடி ரூபாய் செலவில், சிக்னல் மேம்படுத்தி அமைக்கப்பட உள்ளது.சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் பாதையில், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் போக்குவரத்து அதிகம்.இப்பாதையில், எண்ணுார் - கும்மிடிப்பூண்டி இடையே, சிக்னல்கள் நவீன மயமாகின்றன. இப்பணி, 3.35 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே சிக்னல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை எம்,ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, எண்ணுார், கும்மிடிப்பூண்டி வழியாக, ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.இப்பாதையில், 10 நிமிட இடைவெளியில், பயணியர் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க ஏதுவாக, சிக்னல்கள் நவீன தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.இதனையொட்டி, எண்ணுார்- கும்மிடிப்பூண்டி இடையே, சிக்னல் மேம்பாட்டு பணி நடத்தப்பட உள்ளது. இப்பணி, ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X