பொது செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கோளாறு: புறப்பாடு தாமதம்

Added : மே 24, 2019
Advertisement

சென்னை: தோகா செல்லும் விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமான புறப்பாடு தாமதமானது.சென்னையில் இருந்து நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, கத்தார் நாட்டின் தலைநகர் தோகா செல்லும், 'கத்தார் ஏர்வேஸ்' விமானம், புறப்பட தயாராக இருந்தது.அந்த விமானத்தில், 283 பேர் பயணம் செய்ய இருந்தனர். இந்த விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் செல்லத் துவங்கிய சில நொடிகளில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டறிந்தார்.இதையடுத்து, அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே, மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள், இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று காலை, அந்த விமானம், தோகா புறப்பட்டுச் செல்லும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான பயணியர் அனைவரும், சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.உரிய நேரத்தில், விமானி, இயந்திரக் கோளாறை கண்டறிந்ததால், ௨௮௩ பயணியரும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X