டிரம்ப், ராகுலுக்கு பிரதமர் மோடி நன்றி

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் காங்., தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக உள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், காங்., தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தனர்.


நல்லுறவு தொடரும்:


இதுகுறித்து டிரம்ப், தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: லோக்சபா தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தங்களது வாழ்த்துக்கு நன்றி டிரம்ப். இந்த வெற்றி 1.3 பில்லியன் இந்திய மக்கள் எனக்கு அளித்தது. அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ராகுலுக்கு நன்றி:


பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்., தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்திய மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். வெற்றி பெற்ற மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.

ராகுலுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி டுவிட்டரில், 'நல்வாழ்த்துக்களை தெரிவித்த ராகுலுக்கு எனது நன்றி' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201912:22:50 IST Report Abuse
susainathan another five years again talking about opposite party thats it bjp and followrs
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-மே-201909:01:07 IST Report Abuse
sankar பாகிஸ்தான் காரங்க மோடியின் தோல்விய ரொம்ப எதிர் பார்த்திருக்காங்க . அமெரிக்காவில் ஒரு பாய் (பக்ஷிதானி ) என்னிடம் எக்ஸிட் போல் பற்றி விசாரித்தார் . நான் மோடி ஜெயிப்பார் என்றேன் அவர் முகம் வாடியது . நீங்கள் யாருக்கு சப்போர்ட் என்றால் மோடி தான் என்றேன் ஏன் என்று கேட்டார் . காங்கிரஸில் ஊழலின் உச்சம் என்றேன் . அவர் எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள் என்கிறார் . அவர் நோக்கம் மோடி தோற்க வேண்டும் என்பது போல் தோன்றியது அதற்குள் இருவரையும் முடி வெட்டுபவர்கள் அழைத்ததால் பேச்சு தொடரவில்லை .
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201905:58:42 IST Report Abuse
madhavan rajan ராகுல் இனிமேலாவது மக்கள் மனதை புரிந்து நடந்து கொண்டால் சரி. யாருடைய பேச்சையோ கேட்டுக்கொண்டு பிரதமரை கட்டிப்பிடித்துவிட்டு பின்னால் திரும்பி கண்ணடித்து போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலையையெல்லாம் செய்யப்படாது. மோடியை அவர் அன்பால் நேசிப்பதாக சொன்னார். மக்களும் அதையே செய்து விட்டனர். ஒரு தேசத்தின் தலைவரை திருடன் என்று பொதுமக்கள் மத்தியில் கூறியதெல்லாம் மன்னிக்க முடியாத தவறு. இவர் தமிழகத்தில் கூட்டு வைத்திருந்த கட்சியின் தலைவரின் குடும்பத்த்தினரை விடவா ஒரு பெரிய திருடன் இருக்கப்போகிறார்.
Rate this:
Share this comment
s sambath kumar - chennai,இந்தியா
24-மே-201911:04:50 IST Report Abuse
s sambath kumar100 % உண்மையே. மோடியை திருடன் என்று சொல்ல திமுக திருடனுக்கு அருகதை இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X