பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம் l

Added : மே 24, 2019
Advertisement

மதுரை : மதுரை புதுநத்தம் ரோட்டில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பாலத்தின் அடித்தளம் அமைக்க 'லான்சிங் கர்டர்' மற்றும் 'லான்சிங் பாக்ஸ்' பொருத்தும் பணி துவங்கியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பாரத் மாலா திட்டத்தில் 1028 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை-நத்தம் இடையில் 32 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைகிறது. 612 கோடி ரூபாய் மதிப்பில் புது நத்தம் ரோட்டில் தென்மாநிலத்தின் முதல் பறக்கும் பாலம் 7 கி.மீ.,க்கு அமைகிறது.
சொக்கிகுளம் ஐ.ஓ.சி., ரவுண்டானா புது நத்தம் ரோடு முதல் செட்டிகுளம் வரை பாலம் அமைக்க 16,372 சதுரடி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.100 கான்கிரீட் துண்கள்இதில் 30 மீட்டர் பறக்கும் பாலம், 60 மீட்டர் அகலத்தில் நத்தம் வரை நான்கு வழிச்சாலையை சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. ஒரே துாணில் அமையும் பாலத்தில் நான்கு வழிகள் இடம் பெறுகின்றன. இதற்காக 7 கி.மீ., துாரத்திற்கு 225 கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில் 100 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துாண்களும் 2 மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருப்பதால் கீழே ரோட்டில் வாகனங்கள் இடையூறின்றி செல்லலாம்.
இரண்டு அணுகு பாலங்கள் பாலம் அமையும் வழியில் நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம், கருச்சான்பட்டியில் உள்ள கண்மாய்களை சீரமைத்து கரைகளில் 'பேவர் பிளாக்' உடன் கூடிய பூங்கா அமையும். கண்மாய் கரை கோயில்களை அழகாக்கி 'ைஹமாஸ்' விளக்கு பொருத்தப்படும். மதுரை வரும் பகுதியில் உள்ள துாண்களின் பக்கவாட்டில் மீனாட்சி அம்மன், நத்தம் செல்லும் பகுதி துாண்களின் மற்றொரு பகுதியில் கள்ளழகர் சிலை அமைகிறது. இருபுறமும் சங்ககால தமிழ் மன்னர்களின் ஓவியங்கள் தீட்டப்படும். பாலத்தில் ஏறி, இறங்க நாகனாகுளம், திருப்பாலை ரோட்டின் இருபுறமும் அணுகுபாலங்கள் அமைக்கப்படும்.

துாண்களில்'லான்சிங் கர்டர்'அடிப்பாகம் கட்டப்பட்ட கான்கிரீட் துாண்களின் மேல் பாலம் அமைப்பதற்காக 'லான்சிங் கர்டர்' பொருத்தும் பணி தற்போது துவங்கி உள்ளது. இந்த கர்டர்கள் மேல் 'லான்சிங் பாக்ஸ்' இணைக்கப்படும். பின் கான்கிரீட் பிளாக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து பொருத்தி பாலம் கட்டமைக்கப்படும். சில நாட்களுக்கு முன் ஐ.ஓ.சி., ரவுண்டான பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட துாண்களில் கர்டர்கள் பொருத்தப்படுகின்றன. மீதமுள்ள துாண்களின் மேல் பாலத்தை தாங்கும் அடித்தளம் கட்டப்பட்ட பின் கர்டர்கள் பொருத்தப்படும். இதுவரை டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன், நாகனாகுளம், பொறியாளர் நகர், ஊமச்சிகுளம், செட்டிகுளம் பகுதிகளில் துாண்கள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளன.மழைநீர் வடிகால் தொட்டிபுது நத்தம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கும்போது ரோட்டை அகலபடுத்தாமல், மழை நீர் கால்வாய் அமைக்காமல் மீடியன் அமைக்கப்பட்டது.
பின் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் மீடியன் அமைத்த பகுதிகளில் மழை நீர் செல்ல வழியில்லாததால் ரோடு குளம் போல மாறிவிடுகிறது. இதற்கு தீர்வு காண ரோட்டின் இருபுறமும் மழைநீர் செல்ல, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட குழாய்கள் செல்ல இரண்டு கான்கிரீட் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இந்த தொட்டிகளுக்கு மேல் நடைபாதை அமைகிறது. ரோடும் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல தற்காலிக கான்கிரீட் ரோடு அமைக்கின்றனர்.புதிய மின் கம்பங்கள்புது நத்தம் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள பழைய மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் பொருத்தப்படுகின்றன.

பழைய மின் கம்பங்களில் இருந்த மின் ஒயர்கள் புதிய கம்பம் வழியே கொண்டு செல்லப்பட்டு ஆங்காங்கே உள்ள டிரான்ஸ்பார்மர்களில் உடனே இணைத்து விடுவதால் பெரியளவில் மின்தடை ஏற்படுவது இல்லை. இந்த மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்ததால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். நிரந்தர மின் விளக்கு பொருத்தும் வரை தற்காலிக மின் விளக்கு பொருத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X