பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஓய்ந்தென்ன லாபம்: தொழிலாளர் கிடைப்பார்களா?

Added : மே 24, 2019
Advertisement

திருப்பூர்;கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நூற்பாலை, பின்னலாடை, விசைத்தறி, கறிக்கோழி உள்ளிட்ட தொழில்கள் பிரதானம் என்றாலும், விவசாயம் தான் இன்னும் முதன்மையான தொழிலாக நீடிக்கிறது.விவசாயிகளுக்கு சித்திரை, வைகாசிப்பட்டங்களைக் காட்டிலும், இனி வரும் ஆடிப்பட்டம் முக்கியமானது.
குறிப்பாக, விவசாயிகளின் ஒரு ஆண்டுக்கான வாழ்வாதாரத் தேவைகளை, இந்தப்பட்டங்கள் தான் முடிவு செய்கின்றன.முன்புபோல், விவசாயப்பணிகளுக்கு, தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. உழவு, விதைப்பு, களையெடுத்தல், அறுவடை என பணி தெரிந்த தொழிலாளர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனாலேயே, விவசாயத் தொழிலைக் கைவிட்டு, வேறு தொழிலுக்குத் திரும்பியவர்கள் இருக்கின்றனர்.லோக்சபா தேர்தல் மற்றும் சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் களைகட்டியதால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை உருவானது. தொழிற்சாலைகளுக்குச் சென்றுவந்த தொழிலாளர்கள் பலர், தேர்தல் களத்தில் இறங்கினர். இதேபோல், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக்கூட்டங்களுக்கு சென்றுவந்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் தாராளமாகப் பணம் வழங்கியதால், விவசாயப் பணிகளுக்கு செல்லவில்லை.தேர்தல் ஓய்ந்துவிட்ட நிலையில், இனி விவசாயத் தொழிலாளர்கள் எளிதாகக் கிடைப்பார்களா என்று விவசாயிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது:திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், வேலைவாய்ப்பு மற்றும் அதற்கேற்ப வருமானம், தொழிலாளர்கள் பலருக்குக் கிடைக்கிறது. இதனால், இவர்கள் விவசாயப்பணிகளை விரும்புவதில்லை. வெயிலில் அலைந்து திரியாமல், அறைக்குள் அமர்ந்து பணிபுரியவே பலரும் விரும்புகின்றனர்.விவசாயிகள், தங்கள் குடும்பத்தினரைத் தான் விவசாயப்பணிகளுக்குப் பிரதானமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.உள்ளூர் கூலித் தொழிலாளர்கள் பலர், நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்வதால், முழுமையான ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
களை எடுப்பதற்கு கூலியாக பெண்களுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை வழங்க வேண்டியிருக்கிறது. வேலை நேரமும் குறைவுதான். சில கடினமான பணிகளுக்கு ஆண்களுக்கு 500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது.தேர்தல் முடிந்ததால், ஓரளவு விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கலாம். ஆனாலும், எதிர்பார்த்த அளவு கிடைக்கமாட்டார்கள்.தொழிலாளர்கள் அதிகளவு தேவைப்படாத பயிர்ச்சாகுபடிக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X