3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்:குடோனுக்கு சீல் வைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்:குடோனுக்கு 'சீல்' வைப்பு 

Added : மே 24, 2019
 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்:குடோனுக்கு 'சீல்' வைப்பு 

அவிநாசி:அவிநாசியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகையறாக்களை விற்பனை செய்த, மொத்த வியாபாரி சிக்கினார்; அவரது குடோனில் இருந்து, 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்வதில், அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் முனைப்புக்காட்டி வருகிறது. நேற்று, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 'சங்கர் பிளாஸ்டிக்ஸ்' என்ற கடைக்கு சொந்தமான குடோனில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் தலைமையிலான ஊழியர்கள் ரெய்டு நடத்தினர்.குடோன் முழுக்க, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு, டம்ளர் உட்பட பொருட்கள், மூட்டை, மூட்டையாக இருப்பில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி, இரண்டு வாகனங்களில் எடுத்துச்சென்றனர்.'3 டன் எடை கொண்ட அவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் இருக்கும்' என, கணக்கிடப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வரும், ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் குமார், என்பவருக்கு, பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். அவரது குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X