ஸ்மார்ட் சிட்டி; மாநகராட்சி சிறக்குமா! புதிய எம்.பி., செய்ய வேண்டியது என்ன?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி; மாநகராட்சி சிறக்குமா! புதிய எம்.பி., செய்ய வேண்டியது என்ன?

Added : மே 24, 2019

திருப்பூர்:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் சிறப்பதற்கான நடவடிக்கைகளில், புதிய எம்.பி.,யின் பங்கு அவசியமானதாக உள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் திருப்பூர் இடம்பெற்றிருக்கிறது. 'ஸ்மார்ட் சிட்டி'யாக தேர்வு செய்யப்படும் நகரத்தில் கல்வி,வேலைவாய்ப்பு, குடிநீர், மின் வசதி, மின் சிக்கனம், சேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள், கழிவுநீர் மேலாண்மை,
ஆரோக்கியம், இயற்கை வளங்களைக் கவனமாகக் கையாளுதல், முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்வதுதான் இலக்கு.சர்வதேசத் தரத்துடன் வை பை இணைப்பு, பாதாளச் சாக்கடை, தெருவிளக்குகள், பார்க்கிங், நடைபாதைகள், இணைப்புச்சாலை வசதிகள் போன்றவை மேம்படுத்தப்படும். உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.60 சதவீதம் வரை உற்பத்தி தொழில்களுக்கும், சேவை மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 40 சதவீதமும் இடம் ஒதுக்கப்படும். அனைத்து அனுமதிகளும் உடனடியாகக் கிடைக்கும்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, பா.ஜ., அரசு தான் கொண்டு வந்தது. மீண்டும் பா.ஜ., ஆட்சி தொடர்வதால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். திருப்பூரைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் கீழ், பெரிதாக மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் குழாய்ப் பதிப்பு, பாதாளச்சாக்கடைப் பணி போன்றவை எந்தளவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதும் கேள்விக்குறியே.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முழு பொறுப்பையும் மத்திய அரசு வைத்துக்கொள்ளாமல், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அப்படியான பகிர்ந்தளிப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்பூர் எம்.பி., ஸ்மார்ட் சிட்டி பணியின் நிலைமையைக் கண்காணித்து, திருப்பூரின் முன்னேற்றத்துக்கு வழி செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிவிப்பு தவிர நகர்ப்புற மேம்பாட்டுக்கு என்று அடல் மிஷன் ஆப் ரிஜூவனேஷன் மற்றும் டிரான்ஸ்பார்மேஷன் திட்டமும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம், திருப்பூருக்கு நன்மைகள் கிடைப்பதற்குப் புதிய எம்.பி., துணைபுரிய வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி உட்பட இருதிட்டங்கள் மூலம் திருப்பூர் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை நழுவவிடாமல், புதிய எம்.பி.,யின் பணிகள் இருக்க வேண்டும்' என்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X