ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா

Added : மே 24, 2019 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை, தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பெரும் வெற்றியை தந்தாலும் இது ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா என்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பின் அவரது மகன் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் லோக்சபா தேர்தலை தி.மு.க., சந்தித்துள்ளது. சந்தேகம்அதேபோல 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த
ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா

சென்னை, தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பெரும் வெற்றியை தந்தாலும் இது ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா என்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பின் அவரது மகன் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் லோக்சபா தேர்தலை தி.மு.க., சந்தித்துள்ளது. சந்தேகம்அதேபோல 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலும் தி.மு.க., வுக்கு சாதகமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதில் ஸ்டாலினின் தேர்தல் யுக்தி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தபோது ஸ்டாலின் எடுத்த கூட்டணி முடிவுகள் பெரும் வெற்றி பெறவில்லை.அதனால் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகள் எப்படியிருக்குமோ என தி.மு.க.,வின் மூத்த தலைவர்களே சந்தேகத்தில் இருந்தனர். அங்கீகாரம்அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லோக்சபா தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகவும் அங்கீகாரமாகவும் கட்சியினர் பார்க்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின் தலைமைக்கும் தி.மு.க., வுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கலாம். மாறாக தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.அதனால் இந்த வெற்றி அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., அணிக்கு எதிரான அலையாகவே பார்க்கப்படுகிறது.தி.மு.க. மட்டுமே வெற்றி பெற்றிருந்தால் இது தி.மு.க., வுக்கான மக்களின் ஆதரவு என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று அ.தி.மு.க. வுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே இது அ.தி.மு.க., எதிர்ப்பு அலை என்றே பார்க்கப்படுகிறது.அதேநேரம் கூட்டணி தொடர்பான முடிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெற்றிகளை பெற்றபோதும் அதனால் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தை பிடிக்க எந்த பயனும் இல்லாமல் போனதே என தி.மு.க. வினர் கவலையில் உள்ளனர்.தேர்தல் முடிந்ததும் மத்தியில் ராகுல் தான் பிரதமர் என தேசிய அளவில் ஸ்டாலின் தான் முன்மொழிந்தார். இந்த உறுதிமொழிக்கு தி.மு.க., வின் வெற்றி சிறிதளவும் வலு சேர்க்காமல் போய் விட்டது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
31-மே-201916:19:48 IST Report Abuse
R S GOPHALA அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க சொடலைக்காவது...யுக்தியாவது. சட்டையை கிழிச்சிகிட்டு சட்ட சபைக்கு வெளியேதான் எப்பவும் கெடக்கும். எல்லாம் சும்மா. ஏதோ புளுக். இப்போ ராஜா தந்திரம், யுக்தின்னு கலர் கலரா கத வுட்றானுங்க பொறம்போக்குங்க. எல்லாமே பண தந்திரந்தான்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-மே-201918:19:10 IST Report Abuse
Poongavoor Raghupathy Stalin has a great blunder in carrying the useless weight of Rahul and to make him the next PM. Stalin daily dreaming Edappadi Ministry to go out and this also backfired on Stalin. Stalin is not as shrewed a Politician like Kalaignar because Kalaignar would have tied up with BJP and got few Ministers for DMK MPs. Now these DMK MPs can only be a spectator in the Parliament with a big strength with BJP.Even if these DMK MPs can shout in Parliament for any issues their sound will not be heard in front of around 350 NDA MPs, In all fronts DMK has lost even though DMK won 37 MP seats. Both Edappadi and Modi are going to continue in their firm chairs and Stalin will not be able to shake them for few years. Edappadi will now wake up and start giving Freebies in AMMA way and try to capture next election also. This election is a loss for DMK and a gain for Modi and Edappadi. Stalin will he again carry Rahul or throw him out now we have to wait and watch. Stalin may try to woo Modi but Stalin is not required for Modi now. When Modi ready to have a tie up with Modi Stalin threw Modi out and also asked the Country to throw out Modi how now Stalin can approach Modi now. Stalin has done a blunder without knowing the pulse of Indian People and Stalin in his Leadership test has failed now.Edappadi is seen to be a more shrewed Politician and he must follow AMMA FREEBIES WAY for success in future. Edappadi already sat very tight with fevical in his Chair for CM.
Rate this:
Ramanathan V - chennai,இந்தியா
25-மே-201917:33:34 IST Report Abuse
Ramanathan Vyour are wrong...
Rate this:
Ramanathan V - chennai,இந்தியா
25-மே-201917:35:05 IST Report Abuse
Ramanathan Vyour report is not correct...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-மே-201915:13:55 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக எம்பி ..நாய் வாய் அகப்பட்ட தேங்காய் .சாமிக்கும் ஆகாது சட்டினிக்கும் ஆகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X