பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்களில்சீமைக்கருவேல மரங்கள்

Added : மே 24, 2019
Advertisement

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பெரும்பாலான கண்மாய்களில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் மானாவாரி கண்மாய்கள் வறண்டு கிடப்பதுடன் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ளன. இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.

விவசாயிகள் கூறியதாவது:நச்சு மரங்கள் என்ற பட்டியலில் முதலில் இருப்பது சீமைக்கருவேல மரங்கள்தான். வறட்சியை தாங்கி நன்கு வளரும். மழை இல்லாவிட்டாலும், நிலத்தில் தண்ணீரே இல்லையென்றாலும், காற்றின் ஈரப்பதத்தை இம்மரங்கள் உறிஞ்சி நன்கு வளரக்கூடியவை. வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக்கிவிடும். காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகி வருகிறது.இம்மரங்களை வேருடன் அகற்றாவிட்டால் வளர்ந்து கொண்டே இருக்கும். மானாவாரி கண்மாய்கள் மட்டுமின்றி வைகை அணை தண்ணீர் வரத்து கண்மாய்களான பானாங்குளம், ஆரியங்குளம், சேமட்டான்குளம், நிலையூர் பெரிய கண்மாய்களிலும் இம்மரங்கள் காடு போல் வளர்ந்து கிடக்கின்றன.

இக்கண்மாய் தண்ணீரை நம்பி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.இம்மரங்களால் நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆயிரம் அடி போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் இல்லை. கிணறுகளிலும் தண்ணீர் இல்லை .இம்மரங்களால் கண்மாய்க்குள் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இம்மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X