பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டப்பணி தீவிரம்: சட்டசபை தேர்தலுக்குள் வேலைகள் முடியும்?

Added : மே 24, 2019
Advertisement

திருப்பூர்:லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், அவிநாசி - அத்திக்கடவு திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. சட்டசபை தேர்தலுக்குள் பெரும்பாலான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு காலக் கோரிக்கையாக, அவிநாசி - அத்திக்கடவுத் திட்டம் இருந்தது. ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட்டில், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதாக, வாசகங்கள் இடம்பெறுமே ஒழிய, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்க இருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 28-ல் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.இது பாசனத்திட்டம் அல்ல. இருப்பினும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கும் பயனளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகவும் அமையும்.இந்தத் திட்டம், ரூ.ஆயிரத்து 652 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக 115 கி.மீ தொலைவு பிரமாண்ட பைப்லைன் அமைக்கப்படுகிறது. இடையில் 7 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படும். பெருந்துறை அருகே 30 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி மையமும் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்த பிறகு டெண்டர் எடுத்த நிறுவனமே 60 மாதங்களுக்குப் பராமரிக்கும். பின், பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 33 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நிரப்பப்படுகிறது.
அப்பகுதிகளில் வசிக்கும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுவதுடன், 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், இத்திட்டம் வேகமெடுப்பதற்கான வாய்ப்பு உருவெடுத்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்குள் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.'கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் பெரும்பாலும் உறிஞ்சப்பட்டு விட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் விவசாயம் தழைத்தோங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்' என்கின்றனர் விவசாயிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X