முஸ்லிம்களுக்கு எதிரான துறவியை விடுதலை செய்தார் இலங்கை அதிபர்| Dinamalar

முஸ்லிம்களுக்கு எதிரான துறவியை விடுதலை செய்தார் இலங்கை அதிபர்

Added : மே 24, 2019

கொழும்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட புத்த மத துறவி ஞானசாராவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மன்னிப்பு வழங்கினார்.இலங்கையை சேர்ந்த புத்த மத துறவி காலாகோடாட் ஞானசாரா. இவர் போடு பால சேனா என்ற புத்த அமைப்புக்கு தலைமை வகித்து வந்தார்.சமீபத்தில் இலங்கை தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய உள்ளூர் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான கருத்துக்களை 2013லிருந்தே ஞானசாரா கூறி வந்தார்.முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை துாண்டியதாக இவர் மீது 2013ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரை மிரட்டியதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகைளை சீர்குலைத்ததாகவும் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை இலங்கை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து ஞானசாரா சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் புத்த ஜெயந்தியை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 762 கைதிகளுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி சமீபத்தில் விடுதலை செய்தது.இந்த வரிசையில் புத்த மத துறவி ஞானசாராவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மன்னிப்பு வழங்கினார்.இதற்கான ஆவணங்களில் சிறிசேனா கையெழுத்திட்டதை அடுத்து ஞானசாரா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.இதற்கிடையே இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கான காரணங்களை கண்டறியவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பது தொடர்பாக ஆராயவும் 12 நபர் குழு அமைக்க இலங்கை பார்லி அனுமதி அளித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X