பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் 27ல் 2ம் கட்ட கலந்தாய்வு

Added : மே 24, 2019
Advertisement

பல்லடம்:பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 27 ல் நடக்கிறது.பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், வேதியியல், ஆடை வடிவமைப்பியல், பி.காம்., வங்கி மற்றும் காப்பீட்டியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இப்படிப்புகளில் சேர ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.மொத்தம் 414 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வில் 280 இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. மீதமுள்ள 134 இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X