பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்கு முன் சாலை விரிவாக்கப்பணி முடிக்க கோரிக்கை

Added : மே 24, 2019
Advertisement
 பள்ளிகள் திறப்பதற்கு முன் சாலை விரிவாக்கப்பணி முடிக்க கோரிக்கை

விழுப்புரம்:விழுப்புரத்தில் மந்தமாக நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை பள்ளிகள் திறப்பதற்கு முன் முடிக்க வேண்டுமென நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் இருந்து நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரை 12 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.இப்பணிகள் துவங்கி பத்து மாதங்களாகியும், சாலையின் ஒருபுற பணி கூட இதுவரை முழுமை பெறவில்லை. மந்தமாக நடக்கும் விரிவாக்கப்பணியால், இச்சாலையில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டால், நேருஜி ரோடு மற்றும் கிழக்கு பாண்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துவிடும்.இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படும் என நகர மக்கள் புலம்புகின்றனர்.மேலும், பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் மெகா சைஸ் பள்ளம் தோண்டி கிடப்பில் உள்ளதால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.எனவே, மாணவர்களின் நலன் கருதி, மந்தமாக நடக்கும் சாலை விரிவாக்கப்பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X