பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு

Added : மே 24, 2019
Advertisement

செல்லம்பட்டி : செல்லம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் உள்ளது. இப்புழு குருத்துப்பகுதி, இலைகள், கதிர்கள் என பயிரின் அனைத்து நிலைகளிலும் தாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.இப்புழுவினை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுமதி கூறியதாவது:மே, ஜூனில் கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு பேவேரியா பேசியானா மருந்து 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் தாக்குதலை குறைக்கலாம்.மக்காச்சோளத்துக்கு 60-க்கு 25 செ.மீ., அளவுக்கு பயிர் இடைவெளியும், மானாவாரி மக்காச்சோளத்துக்கு 45-க்கு 25 செ.மீ., பயிர் இடைவெளியும் கொண்டு பயிரிட வேண்டும்.வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்திப் பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் பயிர் விதைத்த ஒரு வாரம் முதல் 3 - 4 நாட்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை குவியல் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும்.இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளையும், விதைத்த 7 ம் நாள் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிரில் முட்டை இடுவதையும் தவிர்க்கலாம். 15 - 20 நாட்களுக்கு மேல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் 'மெட்டாரைசிம் அனிசோபிலே' எக்டேருக்கு 4 கிலோ தெளித்து கட்டுப்படுத்தலாம்.முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிரம்மா பெர்டியோசம் 5 சிசி எக்டேரிக்கு வெளியிடுதல், பூஞ்சாணம் தாக்கிய புழுக்களை சேகரித்து அரைத்து பயிருக்கு தெளிப்பதன் மூலமும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருப்பின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஸ்பின்னோசிட் 12 எஸ் பி, 0.5 மி.லி, எமாக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 0.4கிராம், தயோடிகார்ப் 75 டபிள்யூ பி, 2 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.மேலும் விபரங்களுக்கு செல்லம்பட்டி வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X