பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் மீண்டும் லாரி கவிழ்ந்து விபத்து

Added : மே 24, 2019
Advertisement
 நெடுஞ்சாலையில் மீண்டும் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் 7000 காலி பீர் பாட்டில்களுடன் வந்த லாரி கவிழுந்து விபத்துக்குள்ளானது.
மதுரையில் உள்ள திருப்பதி என்ற கம்பெனியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, டி.என்.59 பி.எம்.6647 எண்ணுள்ள ஈச்சர் லாரியில் 250 மூட்டைகளில் 7000 காலி பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்னை வாலாஜாபாத் பகுதியில் உள்ள பீர் கம்பெனிக்கு புறப்பட்டது.லாரியை மதுரை அரசடி முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், 34; என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை அருகே லாரி வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த காலி பீர் பாட்டில்கள் உடைந்து சேதமானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.தொடரும் விபத்துஜக்காம்பேட்டை புதிதாக சாலை போட்டுள்ள நிலையிலும், இதுவரை சாலையை பிரிக்கும் வெள்ளை பெயின்ட் இன்னும் அடிக்கப்படவில்லை. இதேபோன்று, நெடுஞ்சாலையும், சர்வீஸ் சாலையும் இணைக்கும் இடத்தில் உள்ள ரோடு கிராஸ் பீம்களில் உள்ள எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் சரிவர வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 3 லாரிகளும், 8 இருசக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.இப்பகுதியில் சர்வீஸ் சாலை இருப்பதை வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். சர்வீஸ் இருக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் வரையில் திண்டிவனம் கோர்ட் வரை சாலையில் தெர்மோல் பிளாஸ்டிக் பெயிண்ட் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X