டெங்கு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு

Added : மே 24, 2019
Share
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். டாக்டர் சம்பத்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்கு வராமல் தடுக்கும் முறைகள்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். டாக்டர் சம்பத்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்கு வராமல் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.பொது மக்கள், வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் சேமித்து வைக்கும் டிரம்கள் போன்றவற்றை நன்றாக மூடி வைக்கும் படியும், ஆட்டுக்கல், பானைகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கொளஞ்சியப்பன், பாலசேகர், பாசில், வள்ளி, வசந்தா, பாலமுருகன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X