வாடகை கட்டடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை கட்டடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்

Added : மே 24, 2019
 வாடகை கட்டடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்

கள்ளக்குறிச்சி:சொந்த கட்டடம் இன்றி, வாடகை கட்டடத்தில் அவ்வப்போது இட மாற்றம் செய்யப்படுவதால் கள்ளக்குறிச்சி கலால் காவல் நிலைய போலீசார் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடம், கம்ப்யூட்டர், இண்டர்நெட், வெப்கேமரா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது.அதன்படி கள்ளக்குறிச்சியில் டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் சட்டம் ஒழுங்கு, டிராபிக், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அனைத்தும் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன.ஆனால் கலால் பிரிவு காவல் நிலையம் மட்டும் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலை நீடித்து வருகிறது. கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் கலால் பிரிவு காவல் நிலையம் சொந்தமான கட்டடம் இடமில்லாததால் கச்சேரி சாலை, அண்ணா நகர் என பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் என அனைத்து பிரிவு போலீசாரும் பணிபுரியும் இந்த கலால் பிரிவு காவல் நிலையத்திற்கு அரசு சார்பில் சொந்த கட்டடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X