பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர்

Added : மே 24, 2019
Share
Advertisement

பேரையூர் : மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகம், வீடுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் தொட்டிகள் துார்ந்து போய் பயன்பாடின்றி உள்ளன.பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆறு, கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டுள்ளன. தற்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கான ஆழ்துளை கிணறுகளும் வறண்டுள்ளன.மழைநீரை வீணாக்காமல் பூமிக்கடியில் சேமித்து வைக்கும் திட்டமான மழைநீர் சேமிப்பு திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் நிலத்தடி நீர் எதிர்பார்த்த அளவை விட கூடுதலானது. ஆனால் சில ஆண்டுகளாக மழைநீர் சேமிப்பு தொட்டியை வீடுகள், அலுவலகங்களில் யாரும் பராமரிப்பது கிடையாது. இதனால் தொட்டிகளில் மண் மூடி மழைநீரை உறிஞ்சும் தன்மையை இழந்து விட்டன.மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் கூட இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் மழைக் காலத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை சீரமைக்கவும், வீடுகளில் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளதா எனவும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X