பொது செய்தி

தமிழ்நாடு

சாப்பாடு இன்றி தவித்த துப்புரவு பணியாளர்கள்

Added : மே 24, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை காலதாமதமாக அறிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் லோகசபா தேர்தல் ஓட்டு எண்ணும் ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நடந்தது. காலை 8:00 மணிக்கு முதல் சுற்று ஓட்டு எண்ணும் பணி துவங்கிய நிலையில், 9:30 மணி வரை அதற்கான அறிவிப்பு வெளியிடவில்லை.பிற லோக்சபா தொகுதிகளில் முதல் சுற்று ஓட்டு வித்தியாசம் அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறை முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டது.சாப்பாட்டுக்கு தவித்த துப்புரவு ஊழியர்கள்நகராட்சி நிர்வாகம் சார்பில், துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் தலைமையில் 20 பேர் துப்புரவு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு காலை, மதிய உணவு போன்ற தேவைகளை வருவாய்த்துறையினர் செய்து தரவில்லை. இதனால் போலீசார் மற்றும் அரசியல் கட்சியினரிடம், உணவு வாங்கி சாப்பிட வேண்டிய அவலம் ஏற்பட்டது.மொபைலுக்கு கட்டுப்பாடுதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்ல கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அனைவரும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு பெண் அலுவலர் தடையை மீறி மொபைல் போனை மறைத்து எடுத்து வந்தார். அவரிடமிருந்து போலீசார் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X