அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'

Added : மே 24, 2019 | கருத்துகள் (48)
Advertisement
பா.ம.க.,வுக்கு  எம்.பி., பதவி, 'டவுட்'

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பா.ம.க., ஏழு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததால், அக்கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., 'சீட்' கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றது. அக்கட்சிக்கு, தர்மபுரி, ஸ்ரீபெரும்புதுார், உள்ளிட்ட, ஏழு லோக்சபா தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கப்பட்டன.

தி.மு.க., அணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்கப்பட்டது. தேர்தலில், பா.ம.க., அனைத்து தொகுதிகளிலும், படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், அக்கட்சிக்கு, அ.தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், ம.தி.மு.க.,வுக்கு, ராஜ்ய சபா பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Varadharajulu - Chennai,இந்தியா
30-மே-201914:49:43 IST Report Abuse
K.Varadharajulu ப ம க மாநிலங்கள் அவை சீட்டுக்கு தகுதி அற்றது ஒரு தொகுதி ல கூட ஜெய்க்கல பின்ன எதுக்கு அவர்களுக்கு ...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-மே-201914:57:27 IST Report Abuse
Malick Raja வாய்ப்பில்லை என்றே தெரிகிறது பாமக வினால் பாதிப்புதான் ஏற்பட்டது என்பது அதிமுகவுக்கு தெரியும் ... ஆக அன்புமணி அவர்கள் ஓய்வில் இருப்பது உறுதி
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
27-மே-201912:44:01 IST Report Abuse
R S GOPHALA மதிமுகவும், திக-வும் என்றைக்கு ஒழிய போகிறதோ தெரிய வில்லை.. இந்த ரெண்டு கட்சிகளும் ஒழிந்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். நிறைய லெட்டர்-பேடு கட்சிகள் தமிழகத்தில் முளைத்துவிட்டன. இவைகளை வளரவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X