பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, டவுட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'

Added : மே 24, 2019 | கருத்துகள் (48)
பா.ம.க.,வுக்கு  எம்.பி., பதவி, 'டவுட்'

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பா.ம.க., ஏழு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததால், அக்கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., 'சீட்' கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றது. அக்கட்சிக்கு, தர்மபுரி, ஸ்ரீபெரும்புதுார், உள்ளிட்ட, ஏழு லோக்சபா தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கப்பட்டன.

தி.மு.க., அணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்கப்பட்டது. தேர்தலில், பா.ம.க., அனைத்து தொகுதிகளிலும், படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், அக்கட்சிக்கு, அ.தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், ம.தி.மு.க.,வுக்கு, ராஜ்ய சபா பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X