எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது!: ஸ்மிரிதி இரானி

Added : மே 24, 2019 | கருத்துகள் (24)
Advertisement
Smriti Irani,ஸ்மிரிதி இரானி,சாத்தியம்,மத்திய அமைச்சர்

புதுடில்லி: காங்., தலைவர் ராகுலை, அமேதி தொகுதியில் தோற்கடித்த, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, 'எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது' என்ற பிரபல ஹிந்தி கவிதை வரிகளை, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான ஸ்மிரிதி இரானி, 43; கடந்த 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி தொகுதியில், ராகுலை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது, 1.07 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ராகுல் வெற்றி பெற்றார். இப்போது, 2019 லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில், ராகுலை எதிர்த்து ஸ்மிரிதி இரானி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்மிரிதியின் வெற்றிக்கு, காங்., தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, ஸ்மிரிதி இரானி தனது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில், 'எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது' என்ற பிரபல ஹிந்தி கவிஞர் துஷ்யந்த் குமாரின் வரிகளை பகிர்ந்துள்ளார்.

வெற்றிக்குபின் ஏஎன்ஐ க்கு அளித்த பேட்டியில் ஸ்மிரிதி இராணி கூறியிருப்பதாவது : பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ராகுல் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமேதி தொகுதி மக்களுக்கு எனது நன்றிகள். கடந்த தேர்தலில் நான் அங்கு தோல்வியடைந்தபோதும், அவர்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டுவந்தேன். மீண்டும் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். இம்முறை வெற்றி வேட்பாளராக. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
24-மே-201916:01:27 IST Report Abuse
DSM .S/o PLM அடுத்த தேர்தலில ரேபரேலியிலும் இதே போல வெற்றியை பாஜக பெற வேண்டும். மொத்தமாக காங்கிரசை யு பி யை விட்டு வெளியேற்ற வேண்டும். யோகி ஜியின் கைகளில் தான் உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
24-மே-201912:01:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நோகாமல் நோம்பு கும்பிட்டுக்கொண்டிருந்த குடும்பம் இனி இந்தியாவை விட்டு விரட்டப்படும்.
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
24-மே-201911:47:54 IST Report Abuse
King of kindness ஸ்மிர்தி ராணி யின் "WILLPOWER" க்கு கிடைத்த வெற்றி. இவரை போன்ற விடாமுயற்சி உள்ளவர்கள் மற்றும் இளம் ரத்தங்கள் தான் தமிழக பிஜேபி க்கு தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X